உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

கனடா பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

டொரன்டோ: வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ, தன்னுடைய லிபரல் கட்சிக்குள் செல்வாக்கு குறைந்ததால் கடந்த ஜனவரியில் தன் பிரதமர் பதவியையும், கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். இருப்பினும் லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்தார். இதையடுத்து லிபரல் கட்சி தலைவராக மார்க் கார்னி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் புதிய பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஒட்டாவாவில் நேற்று நடந்த விழாவில் கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். பொருளாதார நிபுணரான இவர், இதற்கு முன் கனடா ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ