உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராணுவ விமானம் வெடித்து சூடானில் 46 பேர் பலி

ராணுவ விமானம் வெடித்து சூடானில் 46 பேர் பலி

கெய்ரோ: சூடானில், ராணுவ விமானம் வெடித்து சிதறியதில் ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் என 46 பேர் உயிரிழந்தனர்.வட ஆப்ரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும், ஆர்.எஸ்.எப்., எனப்படும் அதிரடி படையினரும் மோதி வருகின்றனர். இந்த உள்நாட்டு போரால் சூடானில் உள்ள பெரும்பாலான நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டர்புர் என்ற பகுதியில் இனப்படுகொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்துள்ளதாக ஐ.நா., மற்றும் மனித உரிமைக்கான சர்வதேச குழுக்கள் கூறியுள்ளன.கடந்த சில மாதங்களாக போர் தீவிரமடைந்துள்ளது. ராணுவம் ஆர்.எஸ்.எப்., குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ராணுவம் கைப்பற்றி வருகின்றது. இதற்கு பதிலடியாக கடந்த 24ம் தேதி தெற்கு டர்புர் மாகாணத்தின் தலைநகர் நயலாவில் ராணுவ விமானத்தை ஆர்.எஸ்.எப்., குழுவினர் சுட்டு வீழ்த்தினர்.இந்நிலையில் நேற்று முன் தினம் ஒம்துர்மான் பகுதியில் உள்ள விமான தளத்தில் இருந்து புறப்பட்ட ராணுவ விமானம் அடுத்த சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே விழுந்து நொறுங்கியது. இதில் 46 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தரையில் இருந்த மக்களும் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.விமான விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை காரணம் தெரியவில்லை. ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ