உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பைடனுடன் மோடி பேச்சு

பைடனுடன் மோடி பேச்சு

புதுடில்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நேற்று பேசினார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவு:உக்ரைன் நிலைமை உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, அமெரிக்க அதிபர் பைடனிடம் பேசினேன். உக்ரைனில் அமைதி விரைவில் திரும்புவதற்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்தினேன். வங்கதேச நிலவரம் குறித்தும் விவாதித்தோம். அங்கு ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதித்தோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ