உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடியின் உக்ரைன் பயணம்: அமெரிக்கா கருத்து

மோடியின் உக்ரைன் பயணம்: அமெரிக்கா கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் உதவிகரமானதாக இருக்கும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.அரசு முறைப்பயணமாக மோடி போலாந்து, உக்ரைன்ஆகியநாடுகளுக்கு சென்றுள்ளார். இன்று ( ஆக.,23) உக்ரைன் சென்றடைந்த அவர் , அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவிவ்நகரில் சந்தித்து பேசினார்.ரஷ்யா -உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்கா தன்கருத்தை தெரிவிததுள்ளது.இது தொடர்பாக அதிபர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ளதாவது,மோடியின் உக்ரைன் பயணத்தின் மூலம்இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை உயர்த்துவதில் பரஸ்பர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஷ்ய -உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் செயல்பட முடிந்தால் உதவியாக இருக்கும் என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramani Venkatraman
ஆக 24, 2024 18:36

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதை அமெரிக்க வார்த்தைகள். ரஷ்ய, உக்ரைன் அதிபர்கள் சண்டையை ஒதுக்கி சமாதானத்தை நாட அந்த இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.


sebastin raj
ஆக 24, 2024 22:22

Good


Ravi Kulasekaran
ஆக 24, 2024 07:52

இந்த வருட சமாதானத்துக்குகான நோபல் பரிசை பிரதமர் மோடிஜிக்கு தாராளமாக வழங்கலாம்


SenthilKumar S
ஆக 24, 2024 04:59

பாரதம் நடுநிலை கொண்ட நாடு என்பதில் ஐமில்லை.நமது பிரதமர் கூறும் வார்த்தைகள் உலகத்தார் விரும்பும் வகையில் தான் இருக்கும். அனைவருக்கும் நல்லது நடக்கும்.


Tetra
ஆக 24, 2024 06:15

நம் நாட்டு த்ரோகிகளை தவிர


சமீபத்திய செய்தி