உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் பார்லி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.,

பிரிட்டன் பார்லி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற எம்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் பார்லிமென்டில் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி பகவத் கீதையை வைத்து எம்.பி., ஆக பதவியேற்றார். நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும், பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா வெற்றி பெற்றுள்ளார். அவர் பார்லிமென்டில் பகவத் கீதையை வைத்து பதவியேற்றார். 'லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருக்கிறது' என எக்ஸ் சமூகவலைதளத்தில் ஷிவானி பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Durai Kuppusami
ஜூலை 12, 2024 08:22

ஏற்கனவே நம்மை 300 வருடங்கள் அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயனையே நம் இந்திய இந்து பிரதமர் ஆளவில்லையா பிரிட்டனில் காட்சிகள் மாறுகிறது.. இனிமேலும் மாறும்.நம் கீதையின் சத்தியமாக பதவி ஏற்றுக்கொண்ட நம் உறவுக்கு வாழ்த்துக்கள்


subramanian
ஜூலை 12, 2024 07:39

சனாதன தர்மம்தான் உலகை நல்வழியில் செல்ல வழிகாட்ட முடியும். இதை உலகில் உள்ள அனைத்து ஆய்வாளர்களும் கூறியுள்ளார்கள்.


venkat venkatesh
ஜூலை 11, 2024 23:17

Great


Barakat Ali
ஜூலை 11, 2024 20:16

அவருடைய நம்பிக்கை ....... அவருடைய விருப்பம் ......... கால்டுவெல் அவர்களை இந்த எம் பி பின்பற்றாதது திமுகவுக்கு அதிர்ச்சியை அளிக்கக்கூடும் ...


sankaranarayanan
ஜூலை 11, 2024 20:04

உறுதி மொழி எடுக்கும்போது தயாநிதி போன்று கருணா குடும்பத்தில் உள்ளவர்களை வரிசையாக சொல்லாததனால் இவரது பதவி பறிக்கப்படும் இது திராவிட நீதி மன்ற உத்திரவு


T.Thanabalasingham
ஜூலை 11, 2024 18:46

சனநாயகம்,மத நல்லிணக்கம்,பேணும் நாடு


S.kausalya
ஜூலை 11, 2024 18:11

இந்த பெண் MP தமிழச்சி என்பதை விட இந்து பெண் என்பதே உண்மை


Ramesh Sargam
ஜூலை 11, 2024 18:00

ஷிவானிக்கு வாழ்த்துக்கள்.இந்த ஹிந்து கலாசார பற்றை மெச்சுகிறேன். இன்றைய இளைஞர்கள் உன்னைப்போல் செயல்படவேண்டும்.


RajK
ஜூலை 11, 2024 17:23

ஐய்யோ முறையா? சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்தால் திமுக ஒத்துக்காது.உடனடியாக இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு கடிதம் எழுதுவார்கள் இந்த எம்பியை தகுதி நீக்கம் செய்ய.....


Lion Drsekar
ஜூலை 11, 2024 17:14

கறுப்புக்கொடி, இரயில் மறியல், பேருந்துக்கு தீ வைத்தால் , மரங்களை வெட்டி சாய்த்தல் இவைகளுக்கு மீண்டும் வேலை வந்துவிட்டது . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ