உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இம்ரான்கான் கட்சியை தடை செய்ய பாக்., அரசு முடிவு: காரணம் என்ன தெரியுமா?

இம்ரான்கான் கட்சியை தடை செய்ய பாக்., அரசு முடிவு: காரணம் என்ன தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: தேச விரோத செயல்களில் ஈடுபடுவதால், பாகிஸ்தானில் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியை தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான் கான் பிரதமர் ஆனார். 2022ம் ஆண்டு பிரதான கூட்டணி கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தங்களின் ஆதரவைத் திரும்பப் பெற்றன. இதனால் இம்ரான் கான் பார்லிமென்டில் ஆதரவை இழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zpm55d81&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்தார். தற்போது அவர் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தேச விரோத செயல்களில் ஈடுபடுவதால், பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியை தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் நிருபர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தி உள்ளார். மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தடை செய்யப்பட்டால் போராட்டம், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 18:49

அப்போ சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள சோனியா காங்கிரசும் தடை செய்யப்பட வேண்டும்.


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2024 17:47

ஒரே கொள்கை ஒரே வார்த்தை ... செயல் இது மட்டும் தான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை