உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விடாமுயற்சியே வாழ்க்கை: ராகுலுக்கு ஜெய்சங்கர் பதில்!

விடாமுயற்சியே வாழ்க்கை: ராகுலுக்கு ஜெய்சங்கர் பதில்!

ஜெனிவா: 'விடாமுயற்சியே வாழ்க்கை, கடின முயற்சியே வெற்றியை தரும்' என இரண்டு நாள் பயணமாக சுவிட்சர்லாந்து சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜெனிவாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:லோக்சபா எதர்கட்சி தலைவர் ராகுல், எங்களுக்கு ஓட்டு அளித்து அதிகாரத்திற்கு வர வைத்தால் எல்லா பிரச்னைகளையும் உடனடியாக தீர்த்துவிடுவோம் என கூறியிருந்தார். அவர் கூறியபடி உடனடியாக எளிதாக பிரச்னைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட முடியாது. ராகுல் தெரியாமல் பேசி வருகிறார்.முதலில் மனித வள உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். அதனால் நாம் கடினமாக உழைப்போம். அதேவேளையில் நமக்கு தொழில்நுட்பமும் பெரிய அளவில் தேவைப்படுகிறது. அதுதான் உற்பத்திக்கு அவசியம். இப்படி எல்லாமும் இருந்தால் தான், நமது பிரச்னைகள் எல்லாம் தீரும். இது எல்லாம் அவருக்கு தெரியாது.இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை