உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மவுனம் கலைந்தது : ஹாரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னது பிரிட்டிஷ் அரண்மனை

மவுனம் கலைந்தது : ஹாரிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னது பிரிட்டிஷ் அரண்மனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: இரண்டு ஆண்டு கால மவுனத்தை கலைத்து விட்டு இளவரசர் ஹாரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளது இங்கிலாந்து அரச குடும்பம்.இங்கிலாந்துஅரண்மனையில் இளவரசராக வலம் வந்து கொண்டிருந்த ஹாரி கடந்த 2020-ம் ஆண்டில் அரச வாழ்க்கையை விட்டு வெளியேறினார். இதனிடையே கலிபோர்னியா நகரில் தனது மனைவி மேகன் உடன் வசித்து வரும் ஹாரி தன்னுடைய 40-வது பிறந்தநாளை மகன் ஆர்ச்சி மகள் லிமிபெட் மற்றும் நண்பர்களுடன் எளிமையாக கொண்டாடினார். இறுதியாக அரச குடும்ப தரப்பிடம் இருந்து 2021 ம் ஆண்டு வாழ்த்து செய்தி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட்மிடில்டன் தங்களின் எக்ஸ் சமூக வலை தளம் மூலம் ஹாரிக்கு பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஹாரி அரசகுடும்பத்தை விட்டு வெளியேறினாலும் பக்கிங்ஹாம் அரண்மனை ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை அங்கீகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை