உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன விண்கலம்

அமெரிக்காவில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன விண்கலம்

டெக்சாஸ்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சோதனை முயற்சியாக நேற்று செலுத்திய 'ஸ்டார்ஷிப் பிளைட் டெஸ்ட் 8' எனும் ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக நேற்று வெடித்துச் சிதறியது.

ஸ்டார்ஷிப்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், செயற்கைக்கோள் ஏவும் செலவை குறைக்கும் முயற்சியாக ஸ்டார்ஷிப் ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் செயற்கைக்கோளை விண்ணில் ஏவிவிட்டு கடலில் விழாமல், மீண்டும் பூமிக்கும் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ல் இருந்து இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெஸ்ட் பிளைட் என்ற பெயரில் வரிசையாக சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதில் நேற்று எட்டாவது ஸ்டார்ஷிப் சோதனை ராக்கெட், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.ராக்கெட் புறப்பட்ட இரண்டரை நிமிடங்களில் அதில் உள்ள பூஸ்டர் எனப்படும் உந்துசக்தி சாதனம் வெற்றிகரமாக மீண்டும் ஏவுதள கோபுரத்திற்கு திரும்பியது. இதற்கிடையில், ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்கள் முழுமையாக மேலோக்கி செல்லும் முன்பாக இயக்கத்தை நிறுத்தின. இதனால் விண்ணில் ஏவப்பட்ட 17 நிமிடங்களில், இரண்டாம் கட்ட இன்ஜின் பழுதடைந்து ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளின் மேல் வெடித்துச் சிதறியது. இதே இடத்தில்தான் கடந்த ஜனவரியில் ஏவப்பட்ட, ஸ்டார்ஷிப்பின் ஏழாவது ராக்கெட் வெடித்தது.

சேவை பாதிப்பு

இதுவரை ஏவப்பட்ட எட்டு ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளில் நான்கு வெற்றியடைந்துள்ளன. நான்கு தோல்வியில் முடிவடைந்துள்ளன. நேற்று முன்தினம் வானில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பாகங்களால், மியாமி, போர்ட் லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானங்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டன. அதன்பின் விமானப் போக்குவரத்து சீரடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சண்முகம்
மார் 09, 2025 01:11

டேய் மசுக்கு. இந்தியா வந்து கத்துக்கிட்டு போடா.


ஆரூர் ரங்
மார் 08, 2025 14:17

டெஸ்லா காரை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆட்களுக்கு சமர்ப்பணம்.


தமிழன்
மார் 08, 2025 10:34

காரு டமால் விண்கலம் பணால் பேட்டரி காரும் தீப்பிடிக்குது, விண்கலமும் வெடிக்குது எலன் மஸ்க்கை சிவகாசி பட்டாசு ஆலைக்குள் விட்டால் அவ்வளவுதான் சோழி முடிஞ்ச்


Kasimani Baskaran
மார் 08, 2025 07:00

அதி நுட்பமான தொழில் நுணுக்கம் என்றால் அதிக கவனம் தேவை. அவசர கதியில் போதுமான அலசல், ஆராய்ச்சி செய்யாமல் விண்ணில் விட்டால் சிறு பிரச்சினை கூட பெரியதாக வந்து அனைத்தையும் கெடுத்து விடும்.


Senthoora
மார் 08, 2025 06:12

பலகோடி செலவே செய்து நிலவை சுற்ற போனவங்க , பணம் கட்டிடங்களா, சொத்தையும் எலான் மாஸ்க்கு எழுதிவைத்துட்டு போங்க.


சந்திரசேகரன்,துறையூர்
மார் 08, 2025 06:51

அடிப்படை ...கூட இல்லாத நீயெல்லாம் எப்படி சிட்னிக்கு போய் குப்பை கொட்டுற? நீ போடுகிற மொக்க கருத்தை எல்லாம் படித்து தொலைய வேண்டியதிருக்கு முதலில் தமிழை ஒழுங்கா எழுத கற்றுக் கொண்டு கருத்தை போடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை