உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்

விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்

புளோரிடா, விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த எட்டு மாதங்களாக தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வருவதற்காக நேற்று புறப்படுவதாக இருந்த ராக்கெட் பயணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், கடந்தாண்டு ஜ-ூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார்.எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து இவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்ததால், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து பலமுறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.இதனால், எட்டு நாட்களுக்கான பயணம் நீடித்தது. தற்போது எட்டு மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட்டை நேற்று செலுத்துவதாக இருந்தது.புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் நேற்று புறப்படத் தயாராக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், தொழில்நுட்பக் கோளாறுகளால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4:33 மணிக்கு, பால்கன் - 9 ராக்கெட்டை மீண்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ