உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டி-20 உலககோப்பை: இந்தியா ‛சாம்பியன்

டி-20 உலககோப்பை: இந்தியா ‛சாம்பியன்

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது . 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை பெற்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r6588z88&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பவுண்டரிகள் அடித்து அசத்தினர். கேஷவ் மஹாராஜ் பந்துவீச்சில் 9 ரன்னில் அவுட் ஆனார் ரோகித் சர்மா. அடுத்து வந்த ரிசப்பந்த்(0) டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் 3 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அக்ஷர் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விராத் கோஹ்லி(76) நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். முடிவில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது. இந்நிலையில் தென்னாப்ரிக்கா அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.177 ரன்கள் இலக்காகக்கொண்டு பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியின் க்ளாசன் (52)அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து அவுட் ஆனார். குயின்டன் டிகாக் 39 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இறுதியில் தென்னாப்ரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்னில் தோல்வியடைந்தது. பும்ரா, அர்ஷ்தீப் சிங், மற்றும் பாண்ட்யா அசத்தல் பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா அணி சுருண்டது.ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக ‛சாம்பியன் பட்டம் வென்றது.

ரோகித் சர்மா, கோஹ்லி ஒய்வு

இந்திய அணியின் விராட் கோஹ்லி டி-20 தொடர்களிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இப்போட்டி எனது கடைசி போட்டி எனவும் தெரிவித்தார். கோஹ்லியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் டி - 20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஜடேஜா ஓய்வு அறிவிப்பு

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோகித் ஷர்மாவை தொடர்ந்து ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாடு முழுதும் கொண்டாட்டம்

முன்னதாக இந்தியா சம்பியன் பட்டம் பெற்றதை நாடு முழுதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜனாதிபதி வாழ்த்து

'டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இறுதிவரை போராடி போட்டி முழுவதும் சிறந்த திறமையை இந்திய அணி வெளிப்படுத்தி உள்ளது' என ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டி உள்ளார்.

இந்திய வீரர்களுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரோகித் சர்மாவின் சிறப்பான தலைமை பண்பையும், விராட் கோஹ்லியின் இன்னிங்ஸ் மற்றும் அவரது பங்களிப்புக்கும், சூர்யகுமாரின் கேட்ச், மற்றும் பும்ராவின் பங்களிப்புக்கும் மோடி பாராட்டி உள்ளார். டிராவிட் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முழு ஆதிக்கத்துடன் இந்தியா உலகக் கோப்பையை வென்றதை கொண்டாடுவதில் உற்சாகமடைகிறேன். சவாலான சூழல்களில் இணையற்ற அறிவுக்கூர்மையை இந்திய அணி வெளிப்படுத்தியது. தோல்வியே காணாமல் உலகக்கோப்பை தொடரை இந்திய அணி நிறைவு செய்தது பாராட்டுக்குரியது என முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

நாட்டிற்கே பெருமை

இந்திய அணி நம் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றி ரோகித் சர்மாவின் தலைமைக்கு ஒரு சான்று என காங்., எம்.பி ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Venkateswaran Ramamoorthy
ஜூலை 01, 2024 06:34

மனமார்ந்த வாழ்த்துகள்


தங்கம்
ஜூலை 01, 2024 04:28

எதிர் கட்சி தலைவர் ராகுல் என சொல்ல மனமில்லைப்போலும்


Udhaya Shankar N
ஜூன் 30, 2024 22:14

11 வருட இடைவெளி அல்ல , 13 வருடம்.


Karthi
ஜூன் 30, 2024 20:26

Weldone


sundarsvpr
ஜூன் 30, 2024 18:54

வெற்றிக்கு எவரை பாராட்டுவது.? கடைசி ஆட்டத்தில் விராட் ஹோலி நன்றாக விளையாடினார். முந்தைய ஆட்டங்களில் சோபிக்கவில்லை. இதற்கு ஏன் தண்டனை இல்லை?


அல்லாவு அக்பர்
ஜூன் 30, 2024 17:36

இந்த வீணா போன விளையாட்டால் யாருக்காவது பத்து பைசா பெறுமா


அல்லாவு அக்பர்
ஜூன் 30, 2024 17:33

பத்து பைசாவுக்கு பயன் பெறுமா மக்களுக்கு


Karthi
ஜூன் 30, 2024 20:28

Pak win pannal. Unaku happy. So india kku. Vandal unakku vayiru eriyum


வாய்மையே வெல்லும்
ஜூன் 30, 2024 16:41

காங்கிரஸ் கார்கேவின் ஆட்கள் தூங்கி எழுந்தீங்களா? இனிமே தான் லீவ் விட்டெங்களா .


RAMESH BABU ONTIVILLU RAJARAM
ஜூன் 30, 2024 14:07

இந்தியாவின் வெற்றியை கொணடாட விரும்பாதவர்கள் தாரளமாக இந்தியாவை விட்டு வெளியேறலாம்


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 12:16

இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அணி அல்ல. BCCI எனும் தனியார் அமைப்பின் அணி. விளையாட்டு ஏற்பாட்டிலும் அணி தேர்விலும் அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை. இது இந்தியாவின் வெற்றி என எப்படிக் கூற முடியும்? பாரத பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்குவிப்போம். இயன்றவரை எல்லா அடிமைக் கலாச்சார அடையாளங்களையும் தவிர்க்க வேண்டும்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ