உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 7 தொழிலாளர்கள் பரிதாப பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 7 தொழிலாளர்கள் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்கு அருகில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்திற்கு அருகில் பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இறந்த மற்றும் காயமடைந்த நபர்கள் முடிவெட்டும் கடையில் பணிபுரிந்து வந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குவாடரில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் உயிரை காவு வாங்குவது கோழைத்தனமானது ஆகும். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் மிர் ஜியா உல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராமகிருஷ்ணன்
மே 10, 2024 04:55

வெயில் அதிகம். மண்டை சூடு அதிகம் ஆகிவிட்டது.. முன்னே போல அடிக்கடி இந்தியாக்கு வந்து போக முடியல்லே அதனால் லோக்கலே போட்டு தள்ளிட்டு மனசே தேத்திகிட்டு இருக்கோம்.


P. VENKATESH RAJA
மே 09, 2024 22:34

உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை