உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் அமைச்சரவையை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர்: காரணம் இதுதான்!

போர் அமைச்சரவையை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர்: காரணம் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசா மீதான போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க, அமைக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சரவையை கலைப்பதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறித்துள்ளார். பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்., 7ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேரை கொன்றதுடன், அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்டோரையும் கடத்தி சென்றது.இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க, அனைத்து கட்சிகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(ஜூன் 17) அமைக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சரவையை கலைப்பதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறித்துள்ளார். முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் வெளியேறிய நிலையில் நெதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளார்.காசா மீதான போருக்கு பிந்தைய திட்டம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கும், போர் அமைச்சரவை அதிகாரிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஜூன் 18, 2024 02:15

ஹமாஸ் தீவிரவாதிகளை முடிக்கும்வரை போர் முடியாது.


P. VENKATESH RAJA
ஜூன் 17, 2024 19:53

அப்பாடா விரைவில் போர் முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை