உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி விடுவார்; அதிபர் டிரம்ப்

புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி விடுவார்; அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.ரஷ்யா தொடர்ந்த போரில் உக்ரைனுக்கு முந்தைய அமெரிக்க அரசு ஆதரவாக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறிவிட்டன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், உக்ரைனை ஒதுக்குகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வதிகாரி என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a1jravhk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து, டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்க வேண்டும் என அவசியம் இல்லை. அவருக்கு அங்கு வேலையே இல்லை. ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும். ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் செய்வதை தடுத்து நிறுத்துகிறார். புடினை நல்லவராகவோ அல்லது சிறந்தவராகவோ மாற்ற முயற்சிக்கவில்லை. போர் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

PATTALI
பிப் 22, 2025 16:22

இது புதின் மீது பாசம் இல்லை, எதார்த்தமான உண்மை. புதின் பொறுமைக்கு பின்னால் ஏதேனும் திட்டம் இருந்தாலும் இருக்கலாம். உக்ரைன் தானாக போரை நிறுத்தி தங்களை காப்பாற்றிக்கொள்வது நல்லது.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 22, 2025 15:16

அமேரிக்கா, ரஷ்யா இணைந்து சீனாவைத் தாக்கும் என்றும் நாஸ்டர்டாம்ஸ் சொன்னதாக நினைவு ....


HALEEL RAHMAN
பிப் 22, 2025 13:13

டிரம்ப் செய்தது சரியே... ரஷ்யாவிடம் உக்ரைனால் மோத முடியுமா?. ஜெலின்ஸ்கிஇன் அரசியல் ஆசைக்கு அந்த அப்பாவி மக்கள் பழிகேடா..


vbs manian
பிப் 22, 2025 09:23

இவரின் புடின் பாசம் புல்லரிக்கிறது.


Barakat Ali
பிப் 22, 2025 08:34

மூணு வருசமா அவரு ஏன் அப்புடி நினைக்கல ???? எங்க துக்ளக் மன்னர் மாதிரி காமெடி பண்ணுறீங்க ட்ரம்ப் ....


Srinivasan Krishnamoorthy
பிப் 22, 2025 09:47

us was helping to fuel war. now Trump stopped funding. Ukraine, zelennsky cannot fight for a week. please raise up and understand the reality. where is Trudeau today. Trump shows the way .


முக்கிய வீடியோ