வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தியா பாகிஸ்தானுக்கு துணை நிற்க வேண்டும். ஏனெனில், நாட்டின் பிரிவினையின் போது ஆங்கிலேயர்கள் மதத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினர், இதன் விளைவாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது, இது விரும்பத்தகாதது.
நமது இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது நமது தலைவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்துவிட்டனர் ஆகவேதான் நமது நாடு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பலுசிஸ்தான் போன்ற பிரச்சனைகளை சொல்லலாம்.இதை நமது தலைவர்கள் நினைத்திருந்தால் இந்த பிரச்சனைகளை அன்றே முடித்திருக்கலாம் நாம் சில பகுதிகளை அன்று தேவை இல்லை என்று எண்ணியதால் இன்று நாம் பல வகையில் வேதனையுடன் வாழ்ந்துவருகிறோம்.காஷ்மீர் மன்னரும் பலுசிஸ்தான் மன்னரும் இந்தியாவுடன்தான் சேர விரும்பினார்கள் ஆனால் நமது அப்போதைய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்கள் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்ததால் இப்போது நாம் துன்பத்தை அனுபவித்துவருகிறோம் இதற்கு காலம்தான் பதில்சொல்லவேண்டும்.
தீவிரவாதிகள் தலைநகரம் பாக்கிஸ்தான் என்று உலகுக்கே தெரியும்.
பல்வேறு மனிதவுரிமை மீறல்கள் பலூச் மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் 70 ஆண்டுகளாக செய்து வருகிறது. எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் பலூச் மாகாணத்தில் நடப்பதில்லை. 40 பில்லியன் டாலருக்கு பலூச் மாகாணத்தை சீனாவிடம் மொத்தமாக அடகுவைத்து விட்டது பாகிஸ்தான் அரசு. எந்த விதமான கல்வி, பொருளாதார, சமூக நலத்திட்டங்கள், உரிமைகள், சலுகைகள் பலூச் மக்களுக்கு பாகிஸ்தான் தரவில்லை. பல்வேறு ஆதிவாசி இனக்குழுக்கள் வாழும் பலூச் மாகாணத்தையும், பஷ்தூன் பழங்குடியினர் வாழும் கைபர்-பக்தூன்வா மாகாணத்தையும் சுரண்டி கொழுக்கிறது மேற்கு பஞ்சாப் எனும் மேல்தட்டு நவநாகரீக பணக்கார வர்க்கம். எனவே இது முழுக்க முழுக்க வர்க்கபுரட்சி ஆகும். இதற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பகுதிகளுக்கும் இந்தியாவிற்கும் நில வழியாக நேரடியான சாலை தொடர்பே இல்லை. பிறகு எப்படி பணமோ -ஆயுதமோ- மற்ற உதவிகளையோ இந்தியா செய்யமுடியும் ? ஈரான்-ஆப்கானிஸ்தான் மீது வேண்டுமானால் குற்றம் சாட்டலாம்.
இஞ்சி தின்ன குரங்கு போல முழிக்குது இந்த பக்கி அரசு..
வயிட்டேரிச்சல் பிடித்தவர்கள். இந்த பாக்கிஸ்தான் இந்தியாவிக்கு செய்த தீவிரவாத தாக்குதல்கள் என்னில் அடங்காதவை, இப்போது நம்மை பார்த்து குறைக்குது