உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛ பணத்தை திருப்பி தாங்க... : ‛ எக்ஸ் நிறுவனத்தின் நோட்டீசால் முன்னாள் ஊழியர்கள் அதிர்ச்சி

‛ பணத்தை திருப்பி தாங்க... : ‛ எக்ஸ் நிறுவனத்தின் நோட்டீசால் முன்னாள் ஊழியர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ‛‛ தவறுதலாக அதிக பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை திருப்பி தர வேண்டும் '' என முன்னாள் ஊழியர்களுக்கு ‛எக்ஸ்' (டுவிட்டர்) சமூக வலைதள நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.இந்த நோட்டீசை ‛எக்ஸ் ' நிறுவனத்தின் மனித வள மேலாண்மைத்துறை ( எச்ஆர்) இமெயில் மூலம் அனுப்பி உள்ளது. அதில், கூறப்பட்டு உள்ளதாவது : அமெரிக்க டாலரில் இருந்து ஆஸ்திரேலிய டாலருக்கு பணத்தை மாற்றும் போது சில தவறு ஏற்பட்டு விட்டது. இதனால், அதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியான அந்த தொகையை திருப்பி கொடுக்க வேண்டும். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் குறிப்பிடும் படியாக அதிக தொகையை உங்களுக்கு கொடுத்துவிட்டோம். முடிந்த வரையில், இந்த பணத்தை திருப்பி அனுப்பினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.6 பேருக்கு இத்தகைய நோட்டீஸ் வந்துள்ளது. அதில் சிலருக்கு 70 ஆயிரம் டாலர் வரை திருப்பி தர வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய போது ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை கணக்கிடும் போது அமெரிக்க டாலரில் இருந்து ஆஸ்திரேலிய டாலருக்கு மாற்றும் போது தவறு ஏற்பட்டு விட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஊழியர்கள் 1,500 முதல் 70 ஆயிரம் டாலர் வரை திருப்பி தர வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது என ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:34

கொடுத்த பணத்தை என்றைக்கு, யார் திருப்பிக்கொடுப்பார்கள் - இந்த கலிகாலத்தில்...???


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 14:35

அடிப்படை கணக்கு கூட தெரியாமல் தவறுதலாக கணக்கிட்ட மனித வளத்தில் வேலை செய்பவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:32

சரியாக கூறினீர்கள். அதுவே முறையும் கூட.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை