உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாகிட்ட நடக்குமா; காமெடியில் கவுண்டமணியை மிஞ்சுகிறார் டிரம்ப்!

இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாகிட்ட நடக்குமா; காமெடியில் கவுண்டமணியை மிஞ்சுகிறார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''கமலா ஹாரிஸை காட்டிலும் நான் தான் அழகாக இருக்கிறேன்,'' என்று, முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியிருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், சர்ச்சைகளின் நாயகன் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தோற்றுப்போய், தன் ஆதரவாளர்களை விட்டு கலவரம் செய்தது, ஆபாச பட நடிகை வாயடைக்க பணம் கொடுத்து விட்டு, போலிக்கணக்கு எழுதியது என அவர் மீதான சர்ச்சைகள் ஏராளம்.அவரை எதிர்த்து, இந்த தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். 'அவரை எளிதில் வெற்றி கொள்வேன்' என தம்பட்டம் அடிக்கும் டிரம்ப், கமலாவை தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். 'இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப் படுத்துகிறார்'என்றும் கமலா பற்றி டிரம்ப் கூறியுள்ளார்.

கமலாவை வம்புக்கு இழுக்கும் டிரம்ப்

இந்நிலையில், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில், கமலா ஹாரிசின் தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும் கடுமையாக சாடியுள்ளார். அவர் பேசியதாவது: நான் அவரை விட அழகாக இருக்கிறேன். நான் கமலாவை விட நல்ல லுக்காக இருக்கிறேன். எனக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும் இவரை எதிர்த்து போட்டியிட வேண்டியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு என்ன ஆனது? நான் அவரை எதிர்த்து களத்தில் இருக்கிறேன். ஆனால் பைடன் விலகிவிட்டார். இப்போது வேறு ஒருவருக்கு எதிராக போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.தேர்தல் பிரசாரத்தின் போது, தனிப்பட்ட முறையில், விமர்சனம் செய்து வரும் டிரம்ப்பை, கமலா ஓட ஓட விரட்டுவாரா என்று எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 12:25

ஆங்கிலத்தில் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் வாக்கியங்களை உணர்ச்சியற்ற விதத்தில் அப்படியே வேறு மொழிகளில், குறிப்பாக இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்தால் அது காமெடியாகத்தான் இருக்கும் ....


Ramesh Sargam
ஆக 18, 2024 12:23

அழகை காண்பித்து வோட்டு வாங்கமுடியாது ட்ரம்ப் அவர்களே. ஆட்சியில் அமர்ந்தபின் சிறந்த ஆளுமை, ஆற்றல் வேண்டும். ஆளு வளர்ந்த அளவுக்கு மூளை வளர்ச்சி பத்தவில்லை. நம்நாட்டு ராகுல், உதய நிதியைப்போல் இருக்கிறார், பேசுகிறார்.


ஆரூர் ரங்
ஆக 18, 2024 11:45

அவர் கமலா வாக இருக்கிறார். நானோ கமல் மாதிரி புரியாம பேசுறேன். ஆக வல்லரசு மக்கள் புத்திசாலிகளுக்கு ஓட்டுப் போடுறதில்லை.


Punniyakoti
ஆக 18, 2024 11:18

ட்ரம்புக்கு அரை மாத்திரை கம்மி என்பது தான் எல்லோருக்கும் தெரியுமாச்செ


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி