உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அசுத்தம் செய்த தொழிலதிபர் மகன்: பாரம்பரிய மேசையை மாற்றிய டிரம்ப்

அசுத்தம் செய்த தொழிலதிபர் மகன்: பாரம்பரிய மேசையை மாற்றிய டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: சமீபத்தில், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அறையில், அதிபர் டிரம்பை, பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தன், 4 வயது மகனுடன், சந்தித்தார்.அப்போது, அந்த சிறுவன் மூக்கிற்குள் விரலை விட்டு, பின், அதிபர் மேசை மீது அதை துடைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், 150 ஆண்டுகள் பழமையான மேசையை, அதிபர் டிரம்ப் மாற்றி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், 'அதிபர் அலுவலகத்தில் உள்ள மேசை மிகவும் பிரபலமானது. ஜார்ஜ் புஷ் போன்றோர் பயன்படுத்தி உள்ளனர். தற்போது இந்த மேசை புதுப்பிக்கப்படுகிறது. 'இதனால் தற்காலிக ஏற்பாடாக அதிபர் அலுவலகத்தில் புதிய மேசை வைக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டார். எலான் மஸ்க்கின் மகன், மூக்கை துடைத்ததாலேயே, பழமையான மேசையை, அதிபர் டிரம்ப் மாற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மேஜை, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'எம்.எம்.எஸ்., ரிசல்யுட்' என்ற கப்பலில் இருந்த விலை உயர்ந்த மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. இதனால் இது, 'ரிசல்யுட் டெஸ்க்' என, அழைக்கப்படுகிறது. கடந்த 1880ல், பிரிட்டன் ராணி விக்டோரியா, அப்போதைய அமெரிக்க அதிபரான ரூதர்போர்டு பி.ஹேய்சுக்கு இந்த மேஜையை பரிசாக வழங்கினார்; நிக்சன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிபர்கள் இதை பயன்படுத்தி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

naranam
பிப் 23, 2025 10:44

பாவம் அந்தப் பையன்!


Kasimani Baskaran
பிப் 23, 2025 09:48

கிளின்டனை நினைத்து மேஜையை மாற்றி இருப்பார். சிறுவன் மீது பழி போடுவது ஓவரானது.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:46

அருவருப்பு, அதிர்ச்சி, வெறுப்பை உண்டாக்கும் பலான காட்சிகளில் நவத்துவாரங்களையும் பயன்படுத்தும் அமெரிக்கர்கள் இவ்வளவு சுத்தமானவர்களா ?


B MAADHAVAN
பிப் 23, 2025 08:27

பாவம். அந்த சின்ன பையன் மூக்கை நோண்டி தொட்டது தெரிந்ததால் மாற்றினீர்கள். வரக்கூடிய புது மேஜையில் தெரியாமல் யாரெல்லாம் எங்கெல்லாம் தொட்டு எதையெல்லாம் தடவி இருப்பார்களோ .. யாருக்கு தெரியும். தெரியாமல் தடவினால், தோஷமில்லை போலும்.


நிக்கோல்தாம்சன்
பிப் 23, 2025 08:21

பையனுக்கு துணை என்று பதவி கொடுக்காம விட்டார்களே


subramanian
பிப் 23, 2025 04:31

அந்த பையன் அபான வாயு விட்டு விட்டதால், அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதியது கட்டிவிடலாம். ஏற்கனவே ரூதரபோர்ட் தும்மல் எச்சில் பட்டதால் விக்டோரியா அதை அமெரிக்காவுக்கு கொடுத்து விட்டார்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:45

ஆஹாஹா ... ஆஹஹாஹா ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை