உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள் ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள் ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், 'இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்கவில்லை என்றால் ஒருவர் கூட மிஞ்ச மாட்டீர்கள்' என, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j85zgzdd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து போர் மூண்டது.

போர் நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால், இரு தரப்பிற்கும் இடையே ஜன., 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், ஹமாஸ் 25 பிணைக்கைதிகள் மற்றும் எட்டு பேரின் உடல்களை ஒப்படைத்தது. பதிலுக்கு இஸ்ரேல் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.தற்போது ஹமாஸ் வசம் 24 பிணைக்கைதிகள் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் அமெரிக்கர்களும் அடக்கம். மேலும், 34 பிணைக்கைதிகளின் உடல்களும் அவர்கள் வசம் உள்ளன. முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ம் தேதி முடிவுக்கு வந்தது.இந்நிலையில், அமெரிக்கா 1997க்கு பின், முதன் முறையாக ஹமாஸ் தரப்புடன் நேரடியாக கத்தார் தலைநகர் தோஹாவில் சமீபத்தில் பேச்சு நடத்தியது. அதில், எஞ்சியுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஹமாஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. 'பாதி பிணைக்கைதிகளை மட்டுமே விடுவிப்போம்; எஞ்சியவர்களை நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் தான் விடுவிப்போம்' என கூறியது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், காசா மக்களுக்கு வழங்கி வந்த உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற பொருட்களை நிறுத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரும் விலை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிணைக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும்; பிறகு விடுவிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொடூர மனமுடையவர்கள் தான் பிணைக்கைதிகளின் உடல்களை கூட வைத்திருப்பர். ஹமாஸ் அத்தகையவர்கள் தான்.நான் சொல்வது போல் நடக்கவில்லை என்றால், உங்கள் கதையை முடிக்க தேவையான அனைத்தையும் இஸ்ரேலுக்கு வழங்குவேன். பிறகு, ஹமாஸ் அமைப்பில் ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள். இது உங்களுக்கான கடைசி எச்சரிக்கை. காசாவை விட்டு வெளியேறுங்கள்.காசா மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பிணைக்கைதிகளை விடுவித்தால், உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது; விடுவிக்கவில்லை என்றால் நீங்கள் அழிவீர்கள். பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

c.mohanraj raj
மார் 08, 2025 01:57

முதலில் செய்யவும் பிறகு பேசவும்


ஆரூர் ரங்
மார் 07, 2025 10:47

வியட்நாம், ஆப்கான் அனுபவங்கள் நினைவிருக்கிறதா? காஸா பிரச்னைகளை இஸ்ரேலிடம் விட்டு விடுங்கள். கிழட்டு ஆர்மி யை வெச்சு ஒண்ணும் பண்ண முடியாது.


பேசும் தமிழன்
மார் 07, 2025 08:15

சரி.,... சரி.... யார் பெரியவன் என்பதை.... அடித்து காட்டு


Pandi Muni
மார் 07, 2025 08:09

வாய் பேசாம அதை செய்ய மொதல்ல உனக்கு புண்ணியமா போகும்


Kasimani Baskaran
மார் 07, 2025 06:32

ஏற்கனவே போட்ட ஆட்டத்துக்கு கணக்குத்தீர்ப்பதை விட்டுவிட்டு வசனம் பேசினால் சுற்றி இருக்கும் அரபிகளிடம் பணம் வாங்கி திரும்ப தாக்கத்தான் போகிறார்கள்.


Srinivasan Krishnamoorthy
மார் 07, 2025 11:27

trump is doing right thingy. previous government Biden, left liberals were soft on muslim terrorists. trump will eradicate these fully. European nations to learn from us and Trump


Naga Subramanian
மார் 07, 2025 06:26

ஒருவகையில் டிரம்ப் செய்வது சரிதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இதுவரை அமெரிக்கா, குற்றவாளிகள் என்று தெரிந்தும் பாகிஸ்தான் போன்றோருக்கு ஆயுத விற்பனை செய்துதான் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்பொழுது சற்றே மாறுதலாக உள்ளது.


J.V. Iyer
மார் 07, 2025 05:23

பிணையாளிகளை பிடித்துவைத்துக்கொண்டிருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் கொலையாளிகள். பரிதாபம் கூடாது. ட்ரம்ப் செய்வது சரிதான். உலகை காப்பாற்ற ட்ரம்ப் வந்து விட்டார்.


Senthoora
மார் 07, 2025 04:21

இவர் என்ன எல்லா நாடுகளுடனும் சண்டைக்கு போறார். அமெரிக்காவை எங்கே கொண்டுபோகிறார்.


சந்திரசேகரன்,துறையூர்
மார் 07, 2025 06:29

நீயெல்லாம் எப்படி சிட்னியில போய் குப்பை கொட்டுறியோ தெரியல மூர்க்கன்களில் பல பேர் இந்து பெயர்களில் சுற்றிக் கொண்டு திரியிறான்கள்.


Venugopal,S
மார் 07, 2025 08:09

இவன் அவனா இருப்பாநோ?


seshadri
மார் 07, 2025 02:48

நல்லது அவர்களை மட்டுமல்ல ஹெஸ்பொல்லா போகோ ஹராம் மற்றும் மொத்த பாகிஸ்தானையும் ஒழித்து காட்டுங்கள் உலகத்திற்கு நல்லது.


முக்கிய வீடியோ