உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா குறித்த வீடியோ: டிரம்ப் கிளப்பிய சர்ச்சை

காசா குறித்த வீடியோ: டிரம்ப் கிளப்பிய சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து காசாவை நவீன நகரமாக மாற்றியது போல் ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 15 மாதங்களாக போர் நடந்தது. இதில் காசா உரு தெரியாத அளவிற்கு சிதிலமடைந்துள்ளது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் தன் சமூக வலைதளத்தில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'காசா - 2025' என்ற தலைப்பில் போரால் வீட்டை இழந்து சாலையில் திரியும் சிறுமி உள்ளார். அதன் பின் டிரம்பின் காசா என்று வேறு காட்சிகள் விரிகின்றன.அதில் பளபளக்கும் சாலைகள், சொகுசு கார்கள், சொகுசு ஹோட்டல்கள், டிரம்பின் ஆளுயுர தங்க நிற சிலை, டிரம்பை கொண்டாடும் காசா மக்கள், காசாவில் விடுமுறையை கழிக்கும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபடும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரின் காட்சிகள் உள்ளன.இதன் பின்னணியில் 'டிரம்பின் காசா பிரகாசமாக ஜொலிக்கிறது' என்ற பாடலும் ஒலித்தது. இந்த வீடியோவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'உண்மையில் இதை டிரம்ப் தான் பதிவிட்டாரா. பதவிக்கு உண்டான மதிப்பு எங்கே' என்று விமர்சித்துள்ளனர்.கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அதிபர் டிரம்பை அமெரிக்காவில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 'காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும். அங்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவோம்; வீடு கட்டித்தருவோம். காசா புனரமைக்கப்பட்ட பின் பாலஸ்தீனர்கள் உட்பட உலக மக்கள் பலரும் அங்கு வசிப்பர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
பிப் 27, 2025 07:13

தீவிரவாதம் இல்லை என்றால் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை சிறப்பாகவே பார்த்துக்கொண்டது. தொழில்நுட்பம், வேலை போன்ற அணைத்து விதத்திலும் உதவியது. ஆனால் தீவிரவாதிகளின் தூண்டுதலில் பாலஸ்தீனம் தன்னிலை மறந்து இன்று கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை