உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் ஜேம்ஸ் வென்சியின் இந்திய வம்சாவளி மனைவி: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் இந்திய தொடர்பு

டிரம்பின் துணை அதிபர் வேட்பாளர் ஜேம்ஸ் வென்சியின் இந்திய வம்சாவளி மனைவி: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் இந்திய தொடர்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஓஹியோவைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வென்சி அறிவிக்கப்பட்டுள்ளார். துணை அதிபர் வேட்பாளராகிய ஜேம்ஸ் டேவிட் வென்சி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா சிலுக்குரியை கரம் பிடித்துள்ளார். உஷா சிலுக்குரி காலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zbzhors6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வென்சி தனது வாழ்க்கை துணையான உஷாவை 2013ல் யேல் சட்ட கல்லூரியில் முதல் முதலாக சந்தித்தார். அங்கு இருவரும் ஆலோசனை குழுவை அமைக்கும் முயற்சியில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். 2014ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் ஈடுபட்டனர். உஷா சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் வாஷிங்டன்னில் 2015 முதல் 2017 வரை ஒரு நிறுவனத்தில் சிவில் வக்கீலாக பணி புரிந்து வந்தார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் பணிபுரிந்தார். டேவிட் வென்சி தனது மனைவி உஷா சிலுக்குரி குறித்து பேசுகையில்,‛ என் மனைவி என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகவும் ஆதரவாகவும் அன்பானவராகவும் இருந்து வருகிறார். என் வாழ்க்கைப் பாதையில் நல் வாய்ப்புகளை தேடுவதற்கு உதவியாக இருக்கிறார்' இவ்வாறு ஜே.டி.வான்ஸ் தன் மனைவி குறித்து பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.ஜேம்ஸ் டேவிட் வென்சி மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்தியா அமெரிக்க நாடுகளிடையேயான நட்புறவு சிறந்து விளங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

(விடை விரும்பி) Vidai Virumbi
ஜூலை 16, 2024 21:26

மேய்க்குறது எருமை அதுல என்ன வேண்டியிருக்கு பெருமை ... நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிகத்தான்


தத்வமசி
ஜூலை 16, 2024 13:35

உஷா என்பவர் நம்ம ஊராமுங்க. அந்த ஊரில் விழா நடத்தி விடுவோம். ஓடியாங்க.. ஓடியாங்க... ரெடி, ஸ்டார்ட்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 13:15

இந்திய மீடியா பலவும் உஷாவின் புகழ் பாடுகின்றன .......


திண்டுக்கல் சரவணன்
ஜூலை 16, 2024 10:57

அப்படி என்ன பெருமையோ தெரியவில்லை. இது போன்ற செய்திகளை பெருமைப்பட ஏதும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் தான் ஒரு இந்தியா வம்சாவளி என கூறப்போவது இல்லை. அப்படி ஒருவேளை கூறினால் பெருமை தான்.


SUBBU,MADURAI
ஜூலை 16, 2024 12:35

நான் சொல்ல நினைத்த கருத்து தாங்கள் கூறி விட்டீர்கள். இந்திய வம்சாவளி என்றாலே அவர்கள் இந்தியாவை ஆதரிப்பவர்கள் என்று நாமாக கற்பனை செய்து கொள்ளக் கூடாது.


Anand
ஜூலை 16, 2024 10:34

அட நீங்க வேற, அவிங்கவிங்க பொழப்பை பார்க்கிறாங்க


Premanathan Sambandam
ஜூலை 16, 2024 09:35

கமலா ஹாரிஸ், ரிஷி சுநக் இவர்களால் இந்தியா வல்லரசு அகி விட்டதா? அது போல்தான் இதுவும். உங்கள் வேலையை போய் பாருங்கள். வெறும் பெருமை, அற்ப சந்தோசம் தேவையில்லை.


SUBBU,MADURAI
ஜூலை 16, 2024 12:42

இந்தியவம்சாவழி என்றாலே நாம் அதை சட்டை செய்ய தேவையில்லை.


Premanathan Sambandam
ஜூலை 16, 2024 09:32

இந்தியாவுக்கு என்ன பயன்?


Vijay Raghavan
ஜூலை 16, 2024 08:42

அவர் பெயர் வேன்சி அல்ல வேன்ஸ்.


Sampath Kumar
ஜூலை 16, 2024 08:28

இந்திய பெண்கள் உலக அரங்கில் நல்ல தடம் போதிக்கிறார்கள் இந்திய ஆண்கள் உலக அளவில் அந்த ஊரு பெண்களை கரம் பிடிக்கிறார்கள் ஆக இந்தியா மறைந்து கலப்புனதாகும் அபாயம் உள்ளதாக தோன்றுகிறது அதுனால இந்த குச்சி மாஸ்டர்கள் அப்புறம் ரொட்டிகள் அப்புறம் வெண்ணை கல் எல்லாம் விழித்துக்கொண்டான் பிழைத்து கொள்ளவர்கள்


ஆரூர் ரங்
ஜூலை 16, 2024 09:22

எங்களுக்கே குழப்பமாக.


சந்திரன்,போத்தனூர்
ஜூலை 16, 2024 12:45

சமச்சீர் சம்பத்து நீ இரண்டு வரிகளில் கருத்தை போட்டாலே அதை படிப்பது சிரமம் இந்த லட்சணத்தில் பெரிய ஆர்ட்டிகள் போட்ருக்க அதுவும் தப்பும் தவறுமா!


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை