உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் வெளிநாட்டு நிதியுதவிகளை நிர்வகிக்கும் யு.எஸ்.ஏ.ஐ.டி., அமைப்பின் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கும் டிரம்பின் உத்தரவுக்கான நீதிமன்ற தடையை வாஷிங்டன் நீதிபதி நேற்று நீக்கினார்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த 4,000 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது. இந்த நிதியுதவிகள் அமெரிக்காவின் யு.எஸ்.ஏ.ஐ.டி., அமைப்பின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. தற்போது இந்த அமைப்புக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர்.டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், வாஷிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ், நேற்று இந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். தீர்ப்பில் கூறப்பட்டதாவது:பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து, ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது, வேலைவாய்ப்பு சட்டங்களின் கீழ் தான் புகாரளிக்க முடியும். வெளிநாட்டில் உள்ள ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 30 நாட்களுக்குள் அரசின் செலவில் அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Saai Sundharamurthy AVK
பிப் 23, 2025 12:36

தமிழ்நாட்டில் கூட ஊழியர்களை நீக்குவதை விட பொய், பித்தலாட்ட திமுக ஆட்சியை நீக்கினால் சரியாக இருக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 23, 2025 06:26

ஒருத்தர் உலகத்திலே ஒரு நாடு உடாமே 8000 கோடி விமானத்தில் வீணா சுத்திக்கிட்டு இருக்கார். வெட்டியாக பாலம் திறக்க வருகிறேன், ரயில் விட வருகிறேன்னுட்டு கோடிக்கணக்கில் வெட்டி செலவு செய்தும் வீணடிக்கிறார். அதை பத்தி சொல்லேன்.


Ram
பிப் 23, 2025 07:01

தமிழ்நாட்டில் தேவையில்லாமல் இருக்கும் மந்திரிகளின் எண்ணிக்கை , துணைமுதல்வரியும் நீக்கவேண்டும் .... மக்கள் வரிப்பணத்தை சூறையாடிக்கொண்டிருக்கின்றனர்


visu
பிப் 23, 2025 07:10

....குறைபாடுடைய கருத்து


Rajarajan
பிப் 23, 2025 06:22

இந்தியாவில் எப்போ இது நடைமுறைக்கு வரும் ஆபிசர் ? ஆனானப்பட்ட அமெரிக்காவே விழித்துக்கொண்டு விட்டது. இந்தியா எப்போது விழிக்கும் ?


தாமரை மலர்கிறது
பிப் 23, 2025 04:00

வெரி குட். இதே மாதிரி இந்தியாவிலும் மத்திய மாநில அரசின் செலவை குறைக்க அதிரடி நடவடிக்கைகள் தேவை.


புதிய வீடியோ