உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த அதிபர் யார் ?: துவங்கியது ஈரான் அதிபர் தேர்தல்

அடுத்த அதிபர் யார் ?: துவங்கியது ஈரான் அதிபர் தேர்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹரான்: திட்டமிட்டபடி ஈரான் அதிபர் தேர்தல் இன்று துவங்கியது. கடந்த மே மாதம் ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் ஈரான் நாட்டின் உயர் மதத் தலைவரும், அந்நாட்டு அதிபருமான இப்ராஹிம் ரைசி, 63, வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிர் அப்தொலஹின் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது, மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.இந்நிலையில் ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதன்படி ஈரானின் அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என மே 22 ம்தேதி அரசு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இதையடுத்து இன்று அதிபர் தேர்தல் துவங்கியது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் அகமது நிஜாத் , சையீத் ஜலில் உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.தேர்தலில் ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்