உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 5 பேர் கவலைக்கிடம்

கனடாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 5 பேர் கவலைக்கிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கனடா உள்ள டொராண்டோவில் மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்றிரவு 8:40 மணியளவில், யார்க்டேல் அங்காடிக்கு தெற்கே உள்ள ப்ளெமிங்டன் வீதி அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.வன்முறை எதனால் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து டொராண்டோ மேயர் ஒலிவியா சோவ் கூறியதாவது: மிக பரபரப்பான இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். சம்பவ இடத்தில் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்ட மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAAJ68
ஜூன் 04, 2025 10:33

அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது எங்கே யாரு துப்பாக்கியால் சுடுவார்கள் என்பதை கணிக்க முடியாது ஆனால் நம்முடைய மக்கள் அமெரிக்கா போக வேண்டும் கனடா போக வேண்டும் என்று குதிக்கிறார்கள்.


Nada Rajan
ஜூன் 04, 2025 10:12

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை