உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் ஓயாத வன்முறை... டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி

வங்கதேசத்தில் ஓயாத வன்முறை... டாக்காவில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி

டாக்கா: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச முன்னாள் பிரதமர் மகன் தாயகம் திரும்ப உள்ள நிலையில், டாக்காவில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொலை, போராட்டக்காரர்களால் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்துக் கொலை என அடுத்தடுத்த சம்பவங்களால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இதனிடையே, 17 ஆண்டுகளாக வங்கதேசத்தை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், இன்று நாடு திரும்புகிறார். ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால், பிரிட்டனின் லண்டனில் தஞ்சம் புகுந்திருந்தார். வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்புவதால், முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த நிலையில், வங்கதேசத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மேலும் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. நேற்று மாலை தலைநகர் டாக்காவில் உள்ள மோக்பஜார் மேம்பாலத்தில் இருந்து சாலையில் சென்று கொண்டிருந்தோர் மீது வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில், சைபூல் சையாம்,21, என்ற இளைஞர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.அடுத்தடுத்த சம்பவங்களால் டாக்கா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், வங்கதேச போலீசார் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rathna
டிச 25, 2025 12:23

வழிபாட்டு தலங்களில் இருந்து வரும் வன்முறை கும்பல் அப்பாவி ஹிந்து மக்களை கொல்கிறது. இந்த நிலையில் இந்த காட்டான் கூட்டங்களுக்கு முட்டு கொடுக்க வங்காளம், டெல்லி, உத்தரக்கண்ட, அருணாச்சல பிரதேசம் போன்ற சிறு மாநிலங்களை ஆக்ரமித்து ஆட்சியை பிடிக்க இந்த கூட்டம் முயல்கிறது. மத்திய அரசும் இவர்கள் உண்மை முகம் தெரியாமல், ஹசீனாவுடன் நட்பு என்ற ரீதியில் இவர்கள் மீது 10 வருடம் நடவடிக்கை இல்லை. 2020 டெல்லி கலவரம், மற்றும் 2025 நாகபூர் கலவரம் போன்றவை பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. 2047 ல் இந்தியாவில் இரண்டாவது பங்களாதேஷ், பாக்கிஸ்தான் என்ற ரீதியில் நாடு போய் கொண்டு இருக்கிறது. வன்முறையை அவிழ்த்து விட புது புது மக்கள் இல்லாத இடங்களில் வழிபாட்டு தலங்கள் முளைக்கிறது. இதற்கு பணம் எங்கு இருந்து வருகிறது? அவைகள் தீவிரவாதிகள் பதுங்கு குழிகளாக வட மாநிலங்கள், சேட்டன் நாடு, வங்காளம் மாறி வருகிறது.


Techzone Coimbatore
டிச 25, 2025 12:20

அங்கே பெரியார் போன்ற மகான்கள் இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடத்திருக்காது.


amsi ramesh
டிச 25, 2025 11:10

ஏக இறைவன் உங்களுக்கு சாந்தியும் மயான அமைதியும் தரட்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 25, 2025 10:49

மூர்க்கம் இருக்குமிடத்தில் அமைதி இருக்காது.... அமைதி வேண்டுமென்றால் அங்கே மூர்க்கம் இருக்கக் கூடாது ....


Anand
டிச 25, 2025 10:32

இப்போதான் முறைப்படி ஆரம்பித்துள்ளார்கள், இனி போக போக இதில் கொடிகட்டி பறக்கப்போகிறார்கள்.


Anand
டிச 25, 2025 10:30

இந்தியாவுடன் நல்லுறவு கொண்டு முன்னேற்ற பாதையில் செல்லாமல் பாகிஸ்தானுடன் சேர்ந்து நாசமாகிக்கொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் அந்நாடு விரைவில் அழியும்.


தமிழ்வேள்
டிச 25, 2025 10:27

ஒற்றை புத்தகம் உலக அமைதியை அடியோடு அழித்து விடும் போல..


S.V.Srinivasan
டிச 25, 2025 08:08

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி செய்த தவறு. இவர்கள் மீது பாக்கிஸ்தான் போர் தொடுத்த போது, இந்தியா தலையிடாமல், எப்படியோ சாவுங்க என்று விட்டிருந்தால், இந்த தொல்லை இருந்திருக்காது. வளர்த்த கடா மார்பில் பாயுது.


Keshavan.J
டிச 25, 2025 07:49

பாகிஸ்தான் வங்கதேச மக்களை சரியாகப் பயிற்றுவிக்கவில்லை. ஒரே ஒரு நபர் மட்டுமே குண்டுவெடிப்பில் இறந்தார்.


முக்கிய வீடியோ