உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்; இந்தியாவுக்கு பிரிக்ஸ் அமைப்பு ஆதரவு!

பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்; இந்தியாவுக்கு பிரிக்ஸ் அமைப்பு ஆதரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லிமென்ட் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பிரிக்ஸ் அமைப்பு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பில் தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. பிரேசிலில் 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லி குழு கூட்டம் நடந்தது. இதில் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான இந்தியக்குழு பங்கேற்றது.அப்போது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு போராட இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பார்லிமென்டுகளும் ஒப்புக்கொண்டன. பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. செயற்கை நுண்ணறிவு, உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதளவும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை கடைப்படிப்பது தொடர்பாகவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ganapathi Amir
ஜூன் 07, 2025 15:55

அமெரிக்காவும் பிரிட்டனும் சில ஐரோப்பிய நாடுகளும் பணம் கொடுத்து தம்மை பயங்கரவாதத்தை ஆதரிக்க சொன்னதாகவும் தற்போது சீனாவும் சேர்ந்து சொல்வதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக் கொண்டு உள்ளார்.. உலகம் வளர்பவனை அடக்கத்தான் நினைக்கும்.. நாம் தான் நமது நண்பர்கள் துணை கொண்டும் பலத்தின் துணை கொண்டும் வாழ வேண்டும் ..


M Ramachandran
ஜூன் 07, 2025 15:33

எல்லாம் அமெரிக்க அடிமைகள். ப்ரூட்டஸ்கள்.


M Ramachandran
ஜூன் 07, 2025 15:30

உதட்டளவு வார்தைகள். செயலில் முதுகில் குத்துதல்


Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:27

பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லது. இதேபோன்று பயங்கரவாத நாடுகளுக்கு ராணுவ ஆயுதங்கள் கொடுத்து உதவும் நாட்டினரையும் கண்டிக்கவேண்டும். ஆம் நான் இங்கு அமெரிக்காவைத்தான் குறிப்பிடுகிறேன். ஒருபுறம் அமெரிக்கா இந்தியாவுடன் நட்பு என்று கூறும். மறுபுறம் பாக்கிஸ்தான் நாட்டுக்கு ராணுவ ஆயுதங்கள் கொடுத்து உதவும். இது சரியில்லையே.


Varuvel Devadas
ஜூன் 07, 2025 12:18

It seems no one is ready to condemn Pakistans export of terrorism and its indulgence in terrorist activities in India. India should fight it out at any cost.


RAJ
ஜூன் 07, 2025 11:57

என்னடா சொல்றிங்க... அப்போ பிரிக்ஸ்ல சீனா இல்லியா?? இல்ல வீட்டை உள்ள இருந்துகிட்டே கொள்ளுதுறிங்களா???


SUBBU,MADURAI
ஜூன் 07, 2025 09:46

பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்னு சொல்ல துப்பில்லை பொத்தாம் பொதுவாக பயங்கவாத தாக்குதலை கண்டிக்கிறோம் என்று சொல்வதினால் என்ன பயன்?


Sivakumar
ஜூன் 07, 2025 09:34

ப்ரிக்ஸ் கூட்டமைப்பு சீனாவையும் உள்ளடக்கியது. அப்படியிருக்க சீனா தான் பாக் கிற்க்கு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை மற்றும் இதர டிரோன் போன்றவைதந்து உதவியுள்ளது உலகில் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அப்படியிருக்க இந்த அறிக்கை ஒரு கண்துடைப்பு போல உள்ளது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை