வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இதை நம்புங்க.
நிட்ரோஜெனைட்டெட் பொருட்கள் நொறுங்கும் தன்மை உடையது , மறு பாதிப்பு செய்தல் நன்று
புடாபெஸ்ட்: ஹங்கேரியின் பழமையான பன்னோன்ஹால்மா சர்ச்சில் 1,000 ஆண்டு பழமையான புத்தகங்கள் லட்சக்கணக்கில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மர வண்டுகள் சேதப்படுத்தியதால், அவற்றை தடுப்பதற்காக ஒரு லட்சம் புத்தகங்கள் அலமாரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ளது பன்னோன்ஹால்மா நகரம். இங்கு, கி.பி., 996ல் கட்டப்பட்ட பெனடிக்டைன் சர்ச், உலகப் புகழ்பெற்றது. இதில் அப்போதே நுாலகம் ஒன்றும் அமைத்தனர். அந்த நுாலகத்தில் நான்கு லட்சம் புத்தகங்கள் உள்ளன.அவற்றில் பெரும்பாலானவை 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. சமீபத்தில் நுாலகத்தில் ----------------துாய்மை பணி நடந்தபோது, வித்தியாசமான துாசுக்கள் புத்தகங்கள் மீது படிந்திருந்ததை பணியாளர்கள் பார்த்தனர். புத்தகங்களை பிரித்து பார்த்த போது அவற்றில் சிறு சிறு துளைகள் உருவாகியிருந்தன.ஆய்வில் மர வண்டுகள் சேதப்படுத்தியிருப்பது தெரிந்தது. பழமையான நுால்களில் ஜெலட்டின் மற்றும் ஸ்டார்ச் அடிப்படையிலான பசைகள் உள்ளன. அவற்றை வண்டுகள் உண்பதோடு, பக்கங்களை அரித்துள்ளன. இதுபோன்று நுாலகத்தின் பல இடங்களில் இருந்த புத்தகங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.இதனால், அந்த தளத்தில் இருந்த ஒரு லட்சம் புத்தகங்களையும் சேகரித்து வண்டுகளை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொள்கிறது. 'பாதிப்படைந்த புத்தக அலமாரிகளை, மூடப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வைத்து, ஆக்ஸிஜன் நீக்கி, துாய நைட்ரஜன் சூழலில் ஆறு வாரங்கள் வைக்க உள்ளோம். 'இது வண்டுகளையும் அவற்றின் லார்வாக்களையும் அழிக்கும்' என, புத்தகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.
இதை நம்புங்க.
நிட்ரோஜெனைட்டெட் பொருட்கள் நொறுங்கும் தன்மை உடையது , மறு பாதிப்பு செய்தல் நன்று