உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க விசாவுக்கு 13 லட்சம்

அமெரிக்க விசாவுக்கு 13 லட்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க் :அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், விசா வழங்குவதிலும் கெடுபிடி காட்டுகிறார். விசா காலம் முடிந்தும் தங்குவதை தடுக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இதன்படி, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்காக விசா கேட்போர், 13 லட்சம் ரூபாய் வரை, பிணைத் தொகையாக 'டிபாசிட்' செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என,எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஆக 07, 2025 13:04

13 லட்சம் ரூபாய் வரை, பிணைத் தொகையாக டிபாசிட் கொடுத்தாவது நாம் அமெரிக்கா செல்லவேண்டுமா? பேசாம நம்ம பச்சைப்பசேல் கிராமத்தில் ஒரு தென்னை தோப்பில் மரக்கட்டில் போட்டு நிம்மதியா இருக்கலாம். படித்தவர்கள் நல்லபடியாக விவசாயம் செய்யலாம்.


Senthoora
ஆக 07, 2025 11:06

13 லட்சம் பெரியண்ணன் ஒரே கை எழுத்து அடுத்த பிலைட்டில் இந்தியாவுக்கு அனுப்பிடுவார். 13 லச்சம் அம்பேல்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 07, 2025 10:05

பாவம் நம்ம ஊர் தந்தை தாய்மார்கள். மகளுக்கு அல்லது மகனுக்கு குழந்தை கர்ப்ப காலத்தில் இருந்து குழந்தை வளர்ந்து வரும் வரையில் பிள்ளை வீட்டு பெற்றோர் ஆறுமாதம் பெண் வீட்டு பெற்றோர் ஆறுமாதம் என மாறி மாறி போய் ஷோ காட்டி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறிது கஷ்டம் தான்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஆக 07, 2025 07:59

அமெரிக்க மோகம் இருக்கும்வரை எவ்வளவு தொகை ஆனாலும் கொடுத்து செல்ல மக்கள் தயங்கமாட்டர். பிணைத்தொகை தான், அந்த ஊரில் மூன்று மாதம் சம்பாத்தியம்.


rama adhavan
ஆக 07, 2025 07:12

வாய்ப்பு இல்லை.


M S RAGHUNATHAN
ஆக 07, 2025 06:48

இதனால் அமெரிக்காவிற்குத் தான் நஷ்டம். சுற்றுலா துறை பெரிய அடி வாங்கும். போக நினைக்கும் மக்கள் இப்போது சந்தோஷப் படுவார்கள். காரணம் செலவு மிச்சப் படும்.


Karthik Madeshwaran
ஆக 07, 2025 06:31

எல்லாம் நாடுகளும் சேர்ந்து இதேபோல அமெரிக்கர்கள் தங்கள் நாட்டில் நுழைய பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்று கூறினால் அமெரிக்க என்ன செய்யும் ? தான் தான் பெரிய dash என்று அமெரிக்கா நினைத்து கொண்டு மற்ற நாட்டு மக்களை தொடர்ந்து அவமான படுத்துகிறது.


naranam
ஆக 07, 2025 07:20

ஆனால் நம் நாட்டவர்கள் தான் அமெரிக்கா அமெரிக்கா என்று அங்கு போகத் துடித்துக் கொண்டிருக்கின்றனரே!


முக்கிய வீடியோ