உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 14,000 இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பு: நீதிமன்றத்தில் துருக்கி நிறுவனம் வாதம்

14,000 இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பு: நீதிமன்றத்தில் துருக்கி நிறுவனம் வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தங்களுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய சேவை ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது தன்னிச்சையானது. இதனால், 14,000 இந்திய ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியைச் சேர்ந்த, 'ஸெலெபி' நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.பாகிஸ்தான் மீது நம் படைகள் நடத்திய தாக்குதலை, மேற்காசிய நாடான துருக்கி கண்டித்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நம் நாட்டில் ஒன்பதுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பயணியர் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்த துருக்கியின், 'ஸெலெபி' நிறுவனத்திற்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது.இந்த அனுமதி இருந்தால் மட்டுமே, நம் நாட்டின் விமான நிலையங்களில் எந்தவொரு நிறுவனமும் சேவை வழங்க முடியும்.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில், 'ஸெலெபி' நிறுவனம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிட்டதாவது:ஸெலெபி நிறுவனம் இந்தியாவில், 17 ஆண்டுகளாக எந்த குறையும் இல்லாமல் இயங்கி வருகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு அனுமதி ரத்து முடிவு தன்னிச்சையானது.இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படும் போது எங்கள் தரப்புக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும் என்று விதி கூறுகிறது. ஆனால் அதை வழங்கவில்லை. ஸெலெபி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இந்திய நிறுவனம். அதன் ஊழியர்கள் இந்தியர்கள். மத்திய அரசின் நடவடிக்கையால் 14,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். துருக்கியைச் சேர்ந்தவர்கள் நிறுவனத்தில் இருப்பது பிரச்னை என்றால், அவர்களை நீக்கவும் தயார். இவ்வாறு அவர் வாதிட்டார்.மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்புவது, இதுபோன்ற வழக்குகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்' என கூறினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

பா மாதவன்
மே 23, 2025 07:32

துருக்கி நாட்டுக்கு ஆதரவாக வாதாடும், அந்த தேசத் துரோகி வக்கீல் வாய் ஜால பேச்சால் ஏமாற்றப் பார்க்கிறார். இந்த துருக்கி நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டால், நம் நாட்டை சேர்ந்த வேறு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு வேலையில் ஈடுபட போகிறது. அதில், இதே 14000 இந்திய ஊழியர்களுக்கு வாய்ப்பு கிட்டாவிடினும், எப்படியும் 14000 ஊழியர்களுக்கு வாய்ப்பு கிட்டத்தான் போகிறது. அதில் நம் இந்தியர்கள் தான் பணி புரியப் போகிறார்கள் என்பது தெரிந்தும் வாய் சாமர்த்தியத்தால் ஏமாற்றப் பார்க்கும் இந்த தேசத் துரோகி வக்கீல் வாதம் புறந்தள்ளப் படவேண்டும். தேசத் துரோகிகளுக்கு , பணத்திற்காக முன்னின்று வாதாடும் இந்த கேடுகெட்ட வக்கீல் குணம் தோலுரிக்கப் பட வேண்டும்.


Ramesh
மே 22, 2025 20:41

இப்போது இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள் பல முக்கிய வழக்குகளில் சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கிறது. முக்கியமாக பணம் கைமாறும் இடங்களில் தெளிவாக தெரிகிறது.


Dharma Raj
மே 22, 2025 19:32

ஒரு பாமரனுக்கு கூடத் தெரியும் நமது நாட்டுக்கு எதிர் மனநிலை கொண்ட நாடு துருக்கி என்று. ஒரு நீதிபதிக்கு இது தெரியாதா. என்ன ஒத்திவைப்பாம்?இடைப்பட்ட நேரத்தில் பேரம் பேசப்போகிறீர்களா நீதி நிதி பதி.


சத்யநாராயணன்
மே 22, 2025 15:54

துருக்கியவுடன் ஆன உச்ச நீதிமன்றத்தின் பேரம் படித்தவுடன் தீர்ப்பு வாசிக்கப்படும் துருக்கி இந்திய விமான நிலையங்களை கைப்பற்றி கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று


தருமன்
மே 22, 2025 15:53

வேலை இழக்கப் போகும்.இந்தியர்களுக்கு நாம வேலை குடுக்கணும். துருக்கி நிர்வாகம் கெட் அவுட்.


venugopal s
மே 22, 2025 15:32

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடியதற்கு மக்களின் வேலை வாய்ப்பு பறி போய் விட்டது என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் பாஜகவினர் இதை ஆதரிப்பதற்கு பெயர் தான் டபுள் ஸ்டாண்டர்ட்! மத்திய பாஜக அரசு செய்தால் சரி, மாநில திமுக அரசு செய்தால் தவறா?


Ganapathy
மே 23, 2025 11:33

திமுக மட்டையின் இன்னொரு உளறல்


Aarthy
மே 22, 2025 10:37

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். நாட்டின் பாதுகாப்பு முக்கியம். ஹா ஹா ஹா , வழக்கை ஒத்திதான் வைத்துள்ளார்கள். தீர்ப்பு இன்னும் வழங்க படவில்லை....இந்நேரம் துருக்கிய நிறுவனத்தின் பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்து இருக்கும்.


R.P.Anand
மே 22, 2025 09:45

இவனுக்கு யார் அனுமதி கொடுத்தது அவனை கூப்பிடு. இன்னும் இதை கவனிக்க இந்திய கம்பெனி ஒன்றும் இல்லையா. மேக் இன் இந்தியா என்ன ஆனது. இதில் 14000 எம்ப்லாய் யாரு


Anvar
மே 22, 2025 10:09

17 ஆண்டுகளாக அப்போ புரியலையா காங்கிரஸ் தான் .... மேக் இந்த இந்தியா 2015


hariharan
மே 22, 2025 09:30

14000 இந்திய ஊழியர்கள் வேலை இழப்பர் என்பதற்காக நமது நாட்டின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவதில் என்ன தவறு? டாஸ்மாக்கை ஒருவேளை அடுத்த ஆட்சி வரும்பொழுது மூடினால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பர். வேலை இழந்தோர்க்கு அரசு மாற்று ஏற்பாடு செய்யும்.


Ganapathi Amir
மே 22, 2025 08:58

நமது எதிரிகளுக்கு நமது பணம் மட்டும் வேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை