உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 15 ஆயிரம் பேர்: டிரம்பின் அதிர்ச்சி முடிவு!

ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 15 ஆயிரம் பேர்: டிரம்பின் அதிர்ச்சி முடிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர் 15 ஆயிரம் பேரை நீக்க, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:ராணுவத்தில் பணியாற்றும் 15 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் மருத்துவ ரீதியிலாக அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள். அதாவது, அவர்களால், துறை ரீதியிலான சேவைகளை அளிக்க இயலாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.2025- ஜனவரி-20 ம் தேதி அன்று அமெரிக்க அதிபராக, டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்கிறார். அப்போது இதற்கான உத்தரவு அறிவிப்பு வெளியாகும்.டிரம்ப், அதிபராக முதல் முறை பதவி ஏற்றபோது, இதேபோல ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர்வதை தடுத்தார். ஆனாலும் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றி வருகிறார்கள். இந்த முறை அவர்கள் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.அமெரிக்க ராணுவத்தில் 15,000 மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான டிரம்பின் தடையை அதிபர் ஜோ பிடன் நீக்கிவிட்டார்.இப்போது, ​​டிரம்பின் பாதுகாப்புத் தேர்வாளர் பீட் ஹெக்செத் அமெரிக்க ராணுவத்தின் பொறுப்பாளராக இருப்பவர்.அவர் மூன்றாம் பாலினத்தவர்களை பற்றிய நிராகரிப்புக் கருத்துக்களை கொண்டவர்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டிரம்ப் பொறுப்பேற்பதால், அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிக்கல் வரும் என்று பல்வேறு தரப்பினரும் கூறத் தொடங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kulandai kannan
நவ 26, 2024 10:07

லக லக லக


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 09:47

பாலினத்துக்கும், ராணுவப் பணிகளுக்கும் தொடர்புண்டு... ட்ரம்பின் முடிவு சரியே ....


Kasimani Baskaran
நவ 26, 2024 06:15

அவரவர் தகுதிக்கு வேலை கொடுக்கவேண்டும். அனைவரும் சமம் என்று அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது. அறிவாலய அர்ச்சகராக தமிழர்கள் ஒருபொழுதும் நியமிக்கப்பட மாட்டார்கள். மொழி அங்கு முன்னிறுத்தப்படும் - ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.


rama adhavan
நவ 25, 2024 23:30

இவர்கள் பாவம். ஆனால் இவர்கள் உழைத்து முன்னேற விரும்புவதில்லை. அதற்கான முயிற்சியும் இல்லை. சமூகம் நிராகரிப்பதையே இவர்கள் பொதுவாக விரும்புகிறார்கள் போல் உணர்கிறேன். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ரயிலில், பஸ் ஸ்டாண்டில், தெருவில் ஊசி, மணி, பாசி, நரி பல் விற்று பிழைத்த ஏழை சமூகம் கூட இப்போது படித்து முன்னேற துடிக்கிறது. அவர்களிடமிருந்து இந்த பாலினம் பாடம் கற்க வேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 25, 2024 23:14

உங்களின் கருத்தை ஆமோதிக்கமாட்டார்கள்.


தாமரை மலர்கிறது
நவ 25, 2024 22:20

வெரி குட்


Ramesh Sargam
நவ 25, 2024 20:27

அப்படி நீக்க கூடாது. நீக்குவது என்று முடிவு எடுத்துவிட்டால், அவர்களுக்கு அரசின் வேறு ஏதாவது துறையில் பணி கொடுக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு இந்தியா போன்று வீதிகளில் இறங்கி யாசகம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். யாரவது சொல்லுங்கப்பா அந்த பெட்ரோல் பம்புக்கு, மன்னிக்கவும், டொனால்ட் டிரம்புக்கு...


rama adhavan
நவ 25, 2024 23:35

அமெரிக்கா பற்றி தெரியாத, புரியாத கருத்து இது. மாற்றுப் பணி என்னும் பிணி இங்குதான் உள்ளது. அங்கு அரசு ஊழியர்களையே பணி நீக்கம் செய்வார்கள். அரசுப் பணியும் இங்கு கவர்ச்சிகரமானது இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை