உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டுக் கலவரம் குறித்த புகாரை தொடர்ந்து, போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில், ஒரு போலீஸ் நாயும் காயம் அடைந்தது. காயமடைந்த நாயை போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதிகாரிகள் சுடப்பட்ட பிறகு, அருகில் இருந்தவர்கள் அந்த நபரை ஆயுதத்தை கீழே போடுமாறு வற்புறுத்தினர்.பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது கைது செய்தனர். ஆனால் அந்த நபரின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. அமெரிக்காவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஆக 19, 2025 17:24

பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சவகாசம் வைத்து கொண்டு இருந்தால் இப்படி தான் விளையும்... மார்க்க ஆட்களை வரன்முறை இல்லாமல் அனுமதி அளித்து நாட்டின் உள்ளே விட்டால்.... இப்படி தான் அவதிப்பட நேரிடும்.


Ramesh Sargam
ஆக 18, 2025 19:42

இந்த துப்பாக்கி சூடு விவகாரம் இப்பொழுதுள்ள அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டிருக்கிறது. இதை தடுக்க துப்பில்லாத ட்ரம்ப் இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாகவும், இப்பொழுது ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதாகவும் பொய் பிரச்சாரம் செய்துகொண்டு காலத்தை விரயம் செய்துகொண்டிருக்கிறார். அமெரிக்க மக்கள் விழித்தெழவேண்டும். அமைதியான முறையில் போராட்டம் நடத்தி ட்ரம்ப் பதவி விலகுமாறு போராட்டம் செய்யவேண்டும்.


சமீபத்திய செய்தி