உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பலுசிஸ்தானில் அரசியல் பேரணியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் பலி

பலுசிஸ்தானில் அரசியல் பேரணியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் அரசியல் பேரணியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு, பேரணி ஒன்று நடந்தது. பேரணியில் பங்கேற்ற மக்கள் அனைவரும் வீடு வீடு திரும்ப தயாரான போது தற்கொலை படை தாக்குதல் நடந்தது. மக்கள் கூடியிருந்த பகுதியில் குண்டு வெடித்ததில், 22 பேர் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kjg7ab6n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதலில், பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் மகன், அக்தர் மெங்கல், பாதுகாப்பாக தப்பினார். மேலும் 30 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மக்கள் குடியிருந்த பகுதியில் குண்டு கிடப்பதாக, வெடித்து சிதறும் சில நிமிடங்களுக்கு முன்புதான் தகவல் கிடைத்தது. இதனால் தான் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு தாக்குதல்

வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு துணை ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ஆறு பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 12 மணி நேரமாக துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராம்
செப் 03, 2025 21:53

அமைதி மார்க்கம். தற்போது தமிழன் கருத்து போடுவான்.


Artist
செப் 03, 2025 11:58

அமைதி …அங்கே மோதி பிரதமர் இல்லையே


முக்கிய வீடியோ