உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மெக்சிகோவில் சோகம்; சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் சோகம்; சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெக்சிகோ: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.மெக்சிகோவின் சோனோராவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் வழக்கம் போல் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் உதவ, உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம், சோனோரா மாநில கவர்னர் அல்போன்சோ இரங்கல் தெரிவித்தனர். திடீரென தீப்பற்றியதுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை