உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடியின் அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 பேர் முன்பதிவு

மோடியின் அமெரிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 பேர் முன்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பங்கேற்கும் நிகழ்ச்சியை காண, 24,000 இந்திய வம்சாவளியினர் முன்பதிவு செய்துள்ளனர்.பிரதமர் மோடி அடுத்த மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு, ஐ.ஏ.சி.யு., எனப்படும் இந்தோ - அமெரிக்கன் கம்யூனிட்டி அமைப்பு நியூயார்க்கில் செப்., 22ல் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினரிடையே பேசுகிறார். அதைத் தொடர்ந்து, செப்., 26ல் ஐ.நா., சபையின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4t7o0xrk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, ஐ.ஏ.சி.யு., வெளியிட்டுள்ள அறிக்கை: 'மோடியும் அமெரிக்காவும்' என்ற தலைப்பில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நசாவு நினைவு அரங்கத்தில் அடுத்த மாதம் 22ம் தேதி பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தொழில், அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் கலைத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும்.அனைத்து மதத்தினர் மற்றும் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி என இந்தியாவின் அனைத்து மொழி பேசும் மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அவர்களிடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார். 15,000 இருக்கைகள் கொண்ட இந்நிகழ்வுக்கு, நேற்று வரை அமெரிக்காவின் 42 மாகாணங்களிலிருந்து 24,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் இருக்கைகளை அதிகப்படுத்தி, பெரும்பாலானோர் பங்கு பெறும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஆக 29, 2024 15:45

உள்ளூரிலேயே இவர் பேச்சைக் கேட்க நாதியில்லை !


Svs Yaadum oore
ஆக 29, 2024 10:32

விடியல் இங்குள்ள கள்ளக்குறிச்சிக்கு போய் பார்க்க துப்பில்லை ..இதில் விடியல் 17 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணமாம் ....


Selvakumar Krishna
ஆக 29, 2024 10:05

இவனுங்க கட்சிக்கு பணம் கொடுத்து தப்பிக்கப்படவிட்ட குற்றவாளி குடும்பங்களே கூடுதலாக ருக்கும், உள்ளூர் இல் மணிப்பூர் போக துப்பு இல்லை, இதில் வெளிநாடு போயி என்ன புடுங்கி வருவார்?


Duruvesan
ஆக 29, 2024 11:05

வேங்கை வயல்ல ... வக்கில்லாத விடியல் அமெரிக்கா போயி என்ன... போறாரு


அபினவ்
ஆக 29, 2024 09:56

வேறு எந்த நாட்டு அதிபரும் இது மாதிரி ஊர் சுற்றுவதில்லை. ஜனாதிபதியும் தன் பங்குக்கு கெளம்பிட்டார். உள்ளூர் மணிப்பூரை பாக்க நாதியில்லை. உலக அமைதிக்காக ரயில்ல போய் உழைக்குறார்.


Kumar Kumzi
ஆக 29, 2024 10:07

ஓசிகோட்டர் கொத்தடிமையே இன்னும் சவுண்டு கதறு


அமெரிக்கன்
ஆக 29, 2024 09:54

இந்த முறை அப்கே பார் யார் சர்க்கார்?


Kumar Kumzi
ஆக 29, 2024 10:10

பேரு அமெரிக்கன் ஹாஹாஹா ஓஹ் சோத்துக்கு மதம் மாறுன அடிமையா


Svs Yaadum oore
ஆக 29, 2024 08:05

விடியல் 17 நாட்கள் அமெரிக்காவில் முதலீடு திரட்டுகிறாராம் ....பிசினஸ் ப்ரோமோஷன் மீட்டிங் என்று மூன்று அல்லது நான்கு நாட்கள் செல்வார்கள் ...அதற்கு மேல் அங்கே என்ன வேலை ??.....விடியல் 17 நாட்கள் அங்கு யாருடன் சந்தித்து முதலீடு திரட்டுகிறாராம் ??.....


Svs Yaadum oore
ஆக 29, 2024 08:02

விடியல் அங்கே செல்லும் முன்பே இங்குள்ள உள்ளூர் மந்திரியை அங்கே அனுப்பி அதன் மூலம் தனக்கு தானே வரவேற்பு ....


Ranga Ramanathan
ஆக 29, 2024 07:39

காத்துக்கொண்டிருக்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை