உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரே இரவில் 350 ட்ரோன்கள்... பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி; துருக்கியின் நாசவேலை

ஒரே இரவில் 350 ட்ரோன்கள்... பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி; துருக்கியின் நாசவேலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர்களையும் துருக்கி வழங்கியது தெரிய வந்துள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w8tvikia&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், இந்தியா நடத்திய வான்வெளி தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் சூறையாடப்பட்டன. அதேவேளையில், மே 7 மற்றும் 8ம் தேதி இரவில் இந்தியா மீது 300 முதல் 400 ட்ரோன்களைக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியாவுக்கு எதிரான இந்த தாக்குதலில் சீனா மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்து. தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் ஷோபியா குரேஷி, துருக்கியின் சோங்கர் ரக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர்களையும் துருக்கி வழங்கியதாக புது தகவல் கிடைத்துள்ளது. இதன்மூலம், இந்தியா மீது ட்ரோன் தாக்குதல் நடத்த துருக்கி உதவி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான், துருக்கி நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை ரீதியான உறவுகள் அதிக வளர்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ உபகரணங்கள் வழங்குவது மட்டுமல்லாமல், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சியையும் துருக்கி வழங்கி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ட்ரோன் ஆபரேட்டர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Mahadevan
மே 24, 2025 10:47

இஸ்ரேல் விஷயத்தில் எந்த இஸ்லாமிய நாடு அமெரிகாவிற்கு தடை விதித்தது


LOTUS INDIAN
மே 23, 2025 20:56

ஏம்பா ஜெய்னுதீன் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கலாமாப்பா தீவிரவாதிகள் நம் எல்லைக்குள் அத்துமீறி‌ உயிர் பலி‌ செய்தவர்களை, நீங்கள் தாங்கி பிடிப்பது பேராபத்து. உங்கள் வீட்டில் இப்படி‌ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டால் உங்கள்‌கருத்து என்னவாக இருக்கும்?


JAINUTHEEN M.
மே 18, 2025 22:25

துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்தது தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதனால், துருக்கிக்கு இனி எந்த உதவியும் செய்யக்கூடாது, வர்த்தகம் செய்யக்கூடாது, சுற்றுலா செல்லக்கூடாது என்று பொங்குபவர்கள், பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எஃப். நிதியுதவி கிடைக்க இந்தியாவின் எதிர்ப்பையும் மீறிய அமெரிக்கா மீதும், அதன் அதிபர் டிரம்ப் மீதும் இதே போல் நடவடிக்கை எடுக்க நம்ம ஜி க்கு தைரியம் இருக்கிறதா என்பதை விளக்கலாமே.?


Yaro Oruvan
மே 21, 2025 13:52

பார்றா.. உள்ளூர் போலி கூவுது? அது தவறு என்று கூறவில்லை .. மதத்திற்காக கூடுகிறார்கள் நம்மிடம் இருந்து மற்ற உதவிகள் துருக்கிக்கு செல்வதை தடுப்பதில் ஒரு லாஜிக் உள்ளது.. அமெரிக்காவிற்கு நமது ஏற்றுமதி மற்றும் தொழில் அதிகம்.. அதனால் அமெரிக்காவை பகைக்க தேவை இல்லை.. அது பாகிஸ்தானுக்கு உதவத்தான் காரணம் வர்கள் ஆயுத விற்பனை.. அது சரி உனது கமெண்ட் மதம் மதம் அது மட்டுந்தானே? இல்லன்னா துருக்கிக்கும் பாக்கிக்கும் வக்காலத்து வாங்குவியா??


Veera
மே 15, 2025 01:22

One day Israel will fight against Turkey


E. Mariappan
மே 14, 2025 21:35

பாகிஸ்தான் நாட்டை அழிக்காமல் விட்டது தப்புதான்


தமிழ்வேள்
மே 14, 2025 20:27

இவர்களிடம் நன்றி எதிர்பார்ப்பதும் முதலையோடு கொஞ்சி விளையாடுவதும் ஒன்றே..


sakthi Vel
மே 14, 2025 20:10

100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டணர். இப்பதான்நியூஸ் ல பாத்தேன்


Yes your honor
மே 14, 2025 19:19

துருக்கியில் சமீபத்தில் பூகம்பம் ஏற்பட்ட பொழுது, இந்தியா ஓடோடிச் சென்று உதவியது. மருத்துவக் குழுக்களை அனுப்பிவைத்து பல துருக்கியர்கள் உயிரைக் காப்பாற்றியது. 450 பில்லியன் பண உதவியும் செய்தது. ஆனாலும் ஒரு போர் என்று வரும்பொழுது பாகிஸ்தானுக்கு அனைத்து வகைகளிலும் உதவிசெய்து, தனது நன்றியற்ற செயலால், மூர்கன் மூர்கன் தான் என்பதை துருக்கி நிரூபித்து விட்டது. இந்தியர்கள் மத்தியில் தனது மரியாதையையும் இழந்துவிட்டது. இனி எந்த ஒரு இந்தியனும் இஸ்தான்புல் நகருக்கு டூரிஸ்ட் செல்லமாட்டான்.


Tetra
மே 15, 2025 13:47

அதெல்லாம் ஒண்ணுமில்லை. இஸ்தான்புல் பிரியாணி அவர்களை இழுக்கும்


Sambath
மே 14, 2025 19:18

உலகத்துக்கே எதிரி ஒரு குரூப். அந்த குரூப் திருந்த போவதில்லை....


Sekar
மே 14, 2025 18:56

உலகில் அதிகமாக முஸ்லிம்கள் இருக்கும் 3வது நாடு நம் நாடு.நம்மை சுற்றி விரோதிகளும் துரோகிகளும் இருக்கிறார்கள் என்பதை உணர சிறந்த தருணமாக அமைந்தது இந்த ஆபரேஷன்.நாம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நம் நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு நமது எதிர்ப்பவர்களுக்கும் துரோகிகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். நம் நாட்டின் ஒவ்வொரு சிட்டிசனும் அவரவர்கள் பணி புரியும் துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள சவால்களை எதிர்கொள்ள புதிய உத்வேகத்துடன் மாணவர்கள் ஆழ்ந்து கற்று உணர்தல் வேண்டும். வாழ்க பாரதம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை