உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: மத்திய மற்றும் வடக்கு காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தினர் 9 பேர் உட்பட மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.இந்தப் போரால் காசா பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்தும்படி இஸ்ரேலை பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத் தவிர, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்து வருகின்றன.இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டம் நடந்து வருகிறது. இதிலும் இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், 'ஹமாஸ் அமைப்பை ஒழித்து, காசாவில் நடக்கும் போரை முடித்து வைப்போம்' என, தெரிவித்தார்.இந்நிலையில் இன்று மத்திய மற்றும் வடக்கு காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தினர் ஒன்பது பேர் உட்பட மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை நேரத்தில் மக்கள் வீட்டுக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு எதிர்ப்பு உரையை நிகழ்த்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த தாக்குதல் சம்பவம் நடந்து பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

JaiRam
செப் 27, 2025 23:36

வெற்றி தொடரட்டும் மூர்ககளையும் அவனுகளுடைய அடிவருடிகளும் ஒழியும் வரை தாக்குதல் தொடரட்டும் வாழ்க அஞ்ச நெஞ்சன் மாவீரன் நெதன்யாகு


Indhiyan
செப் 27, 2025 23:21

யார் மனித நேயம் அற்றவர்கள்? போரை ஆரம்பித்தது ஹமாஸ். மனிதய நேயம் இல்லாமல் இஸ்ரேலில் ஆயிரம் பொதுமக்களை கொன்று பிணைக்கைதிகளாக பிடித்தவர்கள். பிணை கைதிகளை விடுவித்தால் போர் நிற்கும். ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள்?


suresh Sridharan
செப் 27, 2025 22:44

இஸ்ரேலை எதற்கு குறை சொல்ல வேண்டும் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் அவர்கள் நாட்டு நாட்களை விட்டால் இந்த பிரச்சனை அத்தோடு நின்று விடும் ஒரு சிறிய நாடு 10 நாடுகள் சுற்றும் நின்று தாக்கியும் தழைத்து நிற்கிறது என்ன ஒரு அதிசயம் உழைப்பாளிகள்


bharathi
செப் 27, 2025 19:57

Ismail please advise Pakisthan..and other Islamic nation for the terrorism plotted by them in others land


M.Sam
செப் 27, 2025 19:46

இஸ்ரேயாளிகளின் அய்யோக்கிய தனத்தால் உலக போர் வருவது உறுதி அப்போ இந்தியா யாற்பக்கம் இருக்கும் என்பது பில்லோய்ன் டாலோர் கேள்வி.உலகில் அனைத்து பிரச்சனைகளும் அறிந்தும் யாரும் எந்த நாடும் வாய் மூடி மௌனனம் சாதிப்பது ஏன் ? புரிய வில்லை வெக்கம் கெட்ட மனித நேயம் அற்றவர்களே முதலில் உங்களை ஒஒித்தல் போதும் உலகம் உருப்படும்


ஆரூர் ரங்
செப் 27, 2025 22:09

ஒரு இஸ்லாமிய நாடு கூட பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக. தாக்குதலில் ஈடுபடவில்லை . அறைகளுக்கு இல்லாத கவலை நமக்கேன்? ஹமாஸ் எல்லா இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் விடுவித்தால் போர் நின்றுவிடும். ஹமாசை ஆதரிக்கும் இஸ்லாமியர்கள் திருந்தட்டும்.


ismail
செப் 27, 2025 19:14

இஸ்ரேலை திருத்தவே முடியாது


Indhiyan
செப் 27, 2025 23:22

ஹமாஸ் திருந்தி விட்டதா?


Pandi Muni
செப் 27, 2025 19:08

மூர்க்க மார்க்கம் முற்றிலும் ஒழிந்தால் சரி