உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி

தான்சானியாவில் சோகம்! இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டொடோமா: தான்சானியாவில் இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.கிழக்கு ஆப்ரிக்கா நாடான தான்சானியாவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து இரு பஸ்களும் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கின. இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.கிளிமாஞ்சாரோ அருகே உள்ள சபாசபா பகுதியில், இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த தீக்காயங்கள் காரணமாக, உயிரிழந்தவர்களில், பலர் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், ஒரு பஸ்சின் டயர் பஞ்சரான பிறகு அதன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த கோர விபத்திற்கு, தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி