உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் தகர்ப்பு

ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் தகர்ப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 40 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டதாக தெரிகிறது.ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போர் நடந்து கொண்டு உள்ளது.இதனிடையே, இன்று ரஷ்யாவில் இரண்டு பாலம் இடிந்து விழுந்தது. அதில் ரயில் தடம் புரண்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதற்கு உக்ரைனின் ட்ரோன் தாக்குதலாக இருக்கலாம் என ரஷ்யா சந்தேகம் தெரிவித்து உள்ளது.இந்நிலையில், ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள விமானப்படை தளம் மீது 40 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் 40போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.குறிப்பாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா பயன்படுத்திய நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற டியு 95 மற்றும் டியு -22 ரக போர் தளவாடங்களும் சேதம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதுடன், புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் இந்த தாக்குதல் குறித்து இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது உறுதிப்படும் பட்சத்தில், ரஷ்யா தாக்குதலை துவக்கிய பிறகு, அந்நாட்டின் முக்கிய ராணுவ தளம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் முக்கியமானதாக இது இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மீனவ நண்பன்
ஜூன் 01, 2025 21:46

சண்டை முடிந்தால் நிறைய வேலை வாய்ப்புகள் இரண்டு நாடுகளிலும் உருவாகும் ..இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் ..


முருகன்
ஜூன் 01, 2025 21:08

தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்வது என்பது உக்ரைனுக்கு நன்றாக பொருந்தும்


Ganapathy
ஜூன் 01, 2025 20:26

உக்ரைன் அழிவதன் காரணம் அதை ஆளும் திறனற்ற அறிவற்ற பேராசை கொண்ட ஒரு சிரிப்பு நடிகன். ரஷ்யா இன்னமும்கூட அணுஆயுதங்களை உபயோகிக்காமல் பொறுமை காப்பது உக்ரைன் மக்களை எண்ணித்தான்.


Ramesh Sargam
ஜூன் 01, 2025 20:15

மூன்று வருடங்களாக நடக்கும் இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா வில் பாதி நகரங்கள் அழிந்திருக்குமே. ஒன்று போரை முற்றிலும் நிறுத்தவேண்டும், அல்லது மொத்தமா முடிச்சிடுங்க. சொல்லியும் திருந்தாத ஜென்மங்களை என்ன செய்வது?


SUBBU,MADURAI
ஜூன் 01, 2025 20:01

Russia Over 40 aircraft DESTROYED as Ukrainian drones strike deep into Russian territory. HITS confirmed at Olenya, Belaya, Ivanovo, and Dyagilevo air bases. President Putin calls an EMERGENCY security council meeting.


Natarajan Ramanathan
ஜூன் 01, 2025 19:45

இந்த போரில் ஏன் ரஷ்யா தனது முழு பலத்தையும் உபயோகித்து உக்ரைனை ஒரே நாளில் முடிக்கவில்லை என்று வியப்பாக இருக்கிறது.


ஆரூர் ரங்
ஜூன் 01, 2025 19:57

கூலிப்படை திறமை அம்புட்டுதான்.