உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 401 ஆண்டுகளாக இருந்த கடித வினியோகம் நிறுத்தம்

401 ஆண்டுகளாக இருந்த கடித வினியோகம் நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோபன்ஹேகன்: உலகில் முதல் நாடாக டென்மார்க், கடித விநியோக சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், 1624ம் ஆண்டு முதல் அஞ்சல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கடிதம் அனுப்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் இதனை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது.டென்மார்க்கில் 2000ம் ஆண்டு முதல் கடிதம் அனுப்புவோரின் எண்ணிக்கை, 90 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் 401 ஆண்டுகள் பழமையான இந்த கடித சேவையை அந்நாட்டின் போஸ்ட்நோர்ட் அஞ்சல் நிறுவனம் நிறுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள 1,500 சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றில் பல ஏலத்தில் விற்கப்பட்டு, அந்த நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடித விநியோகம் நேற்றுடன் நிறுத்தப்பட்ட நிலையில், பார்சல் விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Chandhra Mouleeswaran MK
ஜன 01, 2026 02:00

>ஐயோ தம்பீ - ஈ - ஈ - ஈ தமிளு நாட்ல பொரந்துட்டு இப்பிடிப் பச்சப் புள்ளயா இருக்கியளே எங்க திர்ர்ர்ர்ர்ர்ராவிடியா ஆச்சிக்கி இத்து ஒரு பெர்ர்ரிய அவமானம் போன வாரம் டென்மார்க்குக்கு "அந்த சாரு" அதாங்க "சபரி" எதுக்குப் போனாரு? தெரியாதா?


அரவழகன்
டிச 31, 2025 21:20

தமிழகத்தில் தபால் அலுவலகம் குறைக்கப்பட்டு வருகிறது..


JAYACHANDRAN RAMAKRISHNAN
டிச 31, 2025 23:12

தமிழக திராவிட மாடல் அரசு தபால் சேவையை தனியாருடன் இணைந்து நடத்தலாம். அதற்கு பெயர் கலைஞர் தபால் சேவை. குறிப்பு தனியார் என்றால் திமுகவினர் என்று புரிந்து கொள்ள வேண்டும்


தியாகு
டிச 31, 2025 21:09

இதே அறிவிப்பு இந்தியாவில் வந்திருந்தால் அரசு ஏலம் விடுவதற்கு முன்பே டுமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பெட்டிகளும் ஆட்டையை போடப்பட்டு பழைய இரும்பு கடையில் விற்கப்பட்டிருக்கும்.


சுராகோ
டிச 31, 2025 20:46

RIP


முக்கிய வீடியோ