உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென்னாப்ரிக்கா பஸ் விபத்தில் 42 பேர் பலி

தென்னாப்ரிக்கா பஸ் விபத்தில் 42 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க்; தென்னாப்ரிக்காவின் மலை பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில், 42 பேர் உயிரிழந்தனர். தென்னாப்ரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள செங்குத்தான மலைப்பாதையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மலைப்பாதையில் உள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு அந்த பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த பஸ்சில் பயணித்த 42 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என, அஞ்சப்படுவதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். இந்த பஸ் தென்னாப்ரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட வெளிநாட்டு பயணியர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை