உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் ஏழைகள் 10 கோடி பேர்

பாகிஸ்தானில் ஏழைகள் 10 கோடி பேர்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 44.7 சதவீதம் பேர் வசிப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஒரு விவர அறிக்கையில் கூறியுள்ளது.உலக அளவில் உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் புதிதாக திரட்டியுள்ள தரவுகளின் படி வழக்கமான உலகளாவிய திருத்த பகுதியாக, உலக வங்கி அதன் சர்வதேச வறுமைக் கோடு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.சர்வதேச வறுமைக் கோடுகளுக்கான இந்த திருத்தங்கள், சர்வதேச அளவில் ஒரு ஒப்பீட்டுத் திரட்டுதலின் அடிப்படையில், வாங்கும் சக்தி நிலை (poverty lines are based on 2021 purchasing power parity)யை அடிப்படையாகக் கொண்டவை. வறுமை தொடர்பான தகவல்களை இந்த உலக வங்கி மிக துல்லியமாக கணிப்பதாகவும் ஒரு பத்திரிகை பாராட்டி உள்ளது. உலகளாவிய சூழலில் பாகிஸ்தானின் வறுமை நிலைகளை தெளிவுப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும் , பாகிஸ்தானியர்களின் வறுமை பாதிப்பைக் குறைப்பதற்கும், மீண்டு வருவதற்கான யோசனைகளின் முயற்சிகளும் தொடரும் என உலக வங்கியின் பாகிஸ்தான் நாட்டிற்கான இயக்குநர் நஜய்பென்ஹாசீன் தெரிவித்துள்ளார். தற்போதைய கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு ரூ.350 முதல் 361 வரை குறைந்த சம்பளம் வாங்குகின்றனர். இவர்கள் வறுமைக்கோடிற்கு கீழ் வாழும் நிலையாக பிரிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 44. 7 சதவீதம் பேர் (10 கோடி பேர்) இந்த நிலைக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்பதிலும் தாழ்வாக நாள் ஒன்றுக்கு ரூ.258 சம்பளம் வாங்குவோர் உள்ளதாகவும், இவர்கள் தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ. 688 வீதம் சராசரியாக சம்பளம் வாங்குவோர் உயர்ந்த மற்றும் நடுத்தர வர்க்கமாக பிரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

D.Rajan
ஜூன் 06, 2025 16:23

ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் தன் சித்தாந்தத்தை உயர்வாக எண்ணிக்கொண்டு மற்ற மதத்தவரை காஃபிர்கள் என வன்மத்துடன் பார்க்கும் மனோபாவம் அந்த பாகிஸ்தான் நாட்டவர்க்கு இருக்கும் வரை அங்கு வறுமை வளர்ந்து கொண்டுதான் இருக்கும்


magan
ஜூன் 06, 2025 15:19

எதற்க்கு பிள்ளைகளை பெர்க்கிரோம் என்று தெரியாத கூட்டம்


venugopal s
ஜூன் 06, 2025 15:19

ஒன்றரை கண்ணன் குருடனை கேலி செய்வது போல் உள்ளது! நமது நாட்டில் சதவீதம் குறைவாக இருந்தாலும் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழி பாருங்கள் முதலில்!


D.Rajan
ஜூன் 06, 2025 16:24

நம் நாட்டை உயர்வாக என்னும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும்.


ponssasi
ஜூன் 06, 2025 14:35

இருபத்தி ஐந்து கோடி மக்கள் தொகையில் பத்து கோடி ஏழைகளா? மிக மிக கொடுமையான விஷயம் வறுமைக்காக பாகிஸ்தான் பெண்கள் சீனர்களுக்கு விற்கப்படுவதுதான். இவர்களின் நட்பின் ஆழம் இதுதான்.


SUBRAMANIAN P
ஜூன் 06, 2025 13:44

பாகிஸ்தான்ல ஜனநாயகம் இன்னும் வரவில்லை. அதனுடைய வீழ்ச்சிக்கு இதுதான் காரணம். தன்வீட்டை பார்க்காமல் பக்கத்து வீட்டுகாரனையே பார்த்து பொறாமையில் வெந்து சாவதால் தாழ்ந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். குறைந்தது பத்து வருடம் இந்தியாவை எட்டிக்கூட பார்க்காமல் அவர்கள் வளர்ச்சியில் முழு எண்ணத்தையும் செலுத்தட்டும்.. பார்க்கலாம்.


A1Suresh
ஜூன் 06, 2025 13:36

முயல் அமாவாசை அமாவாசைக்கு குட்டிபோடுமாம். குழந்தை பெறும் முன்னர் அவர்களை வளர்க்க-கல்விகற்றுத்தர-இன்சூரன்ஸ்-வீடு-சொத்து-உணவு இவைகளை யாரும் அக்கறைப்படுவதே இல்லை. அதனாலேயே இந்த விளைவு.


A1Suresh
ஜூன் 06, 2025 13:34

திமுகவும் பாகிஸ்தான் போல தமிழ், கீழடி என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கி சுரண்டி வருகிறது. இன்னும் 2 முறை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமும் பாகிஸ்தான் போலவே ஆகும். பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதுவது போல திமுக மத்தியஅரசுடன் மோதுகிறது. பாகிஸ்தான் இஸ்லாத்தை பேசுவது போல திமுக தமிழ்ப்பற்று பேசுகிறது.


D.Rajan
ஜூன் 06, 2025 16:27

அருமையான கருத்து


நாஞ்சில் நாடோடி
ஜூன் 06, 2025 12:40

ஊழலும் தீவிரவாதமும் வளரும்போது ஒரு நாட்டின் நிலைமை இப்படித்தான் இருக்கும்...


Ramesh Sargam
ஜூன் 06, 2025 12:17

பாகிஸ்தான் அங்குல பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும்வரை இந்த நிலை தொடரும். ஏன் நிலைமை மேலும் மோசமாகலாம். பாகிஸ்தான் ஏழ்மை நிலையை போக்கவேண்டியது பாகிஸ்தான் அரசின் கடமை. அதைவிட்டு அங்குள்ள பயங்கரவாதிகளை வளர்ப்பது மடமை.


ராமகிருஷ்ணன்
ஜூன் 06, 2025 11:31

அவர்கள் நிலைக்கு காரணம் பாகிஸ்தான் அரசு மட்டுமே. இரக்கப்பட்டு எதுவும் ஆக போவதில்லை. மக்களின் கோபம் அவர்களின் அரசு மீது பாயட்டும்.


சமீபத்திய செய்தி