UPDATED : ஆக 30, 2024 06:38 PM | ADDED : ஆக 30, 2024 04:08 PM
பாரிஸ்: பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் வென்று அசத்தினர். அதேபோல், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை வெண்கலம் வென்றார்.மேலும் 10 மீ ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால் வெள்ளி பதக்கம் வென்றார்.பிரான்சின் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c8cv5f56&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.ஓட்டப்பந்தயம்
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக் ஓட்டப்பந்தய வரலாற்றில் இந்தியா சார்பில் பெறப்படும் முதல் பதக்கம் இது.வெள்ளி வென்றார் மனீஷ்
பாரா ஒலிம்பிக் 10 மீ ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால்வெள்ளி பதக்கம் வென்றார்.