உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 4வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன் சேர்ப்பு

4வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன் சேர்ப்பு

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 358 ரன் சேர்த்தது.இந்தியா-இங்கிலாந்து அணிக்கிடையே 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.நேற்று முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்திய அணி, 83 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 264 ரன்கள் எடுத்தது. நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 37 ரன் எடுத்தபோது, கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் பேட்டில் லேசாக பட்டு, அவரது காலில் பட்டு காயம் ஏற்பட்டது. விளையாட முடியாமல் வெளியேறினார். அதை தொடர்ந்து இன்று 2 வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஷர்துல் தாக்குர் 41, வாஷிங்டன் சுந்தர் 27, ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் அவுட் ஆகி வெளியேறினர். இந்த நிலையில் நேற்று காயம் பட்டு வெளியேறிய ரிஷப் பண்ட், இன்று மீண்டும் விளையாடினார். அவர் 54 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்திய தரப்பில் அதிகபட்சமாக, சாய் சுதர்ஸன் 61, ஜெய்ஸ்வால் 58, கே.எல்.ராகுல் 46 ரன்கள் சேர்த்தனர்.இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பவுலர்கள் தடுமாற்றம்:

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கிராலே (84), டக்கெட்(94) வலுவான துவக்கம் தந்தனர். இந்திய பவுலர்கள் ஏமாற்றினர். அறிமுக அன்ஷுல் கம்போஜின் முதல் ஓவரில் டக்கெட் 3 பவுண்டரி அடித்தார். பும்ரா, சிராஜ் ஓவரிலும் பவுண்டரிகள் பறந்தன. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 225/2 ரன் எடுத்து, 133 ரன் பின்தங்கியிருந்தது. போப் (20), ரூட் (11) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் கம்போஜ், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ