உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி.,யில் 5வது டெஸ்ட்: இந்திய அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட்

ஆஸி.,யில் 5வது டெஸ்ட்: இந்திய அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி: சிட்னியில் நடக்கும் ஆஸி., அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினர், முதல் இன்னிங்ஸில் 185 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகினர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்தியா வென்றது. அடிலெய்டு, மெல்போர்னில் தோற்க (பிரிஸ்பேன் டெஸ்ட் 'டிரா') தொடரில் 1-2 என பின்தங்கியுள்ளது; ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று (ஜன.,03) சிட்னியில் துவங்கியது.மோசமான 'பார்ம்' காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். 'டாஸ்'வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆஸி., வீரர்களின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிக்கொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 72.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்மாக ரிஷப் பன்ட்- 40, ரவீந்திர ஜடேஜா- 26 ரன் எடுத்து அணிக்கு உதவினர்.அடுத்து களமிறங்கிய ஆஸி., அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா (2) ரன்னில் பும்ரா பந்தில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., அணி 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sudha
ஜன 03, 2025 18:19

ஒரு கால்பந்து கோச் தான் இவர்களுக்கு சரிப்பட்டு வருவார். மேலும் இந்த தொடரின் வருமானத்தில் பாதியை ஏதேனும் நற்காரியங்களுக்கு வழங்கினால் நாலு பேர் பாராட்டுவார்கள். இதர விளையாட்டு வளர்ச்சிக்கும் கொடுக்கலாம்


Haja Kuthubdeen
ஜன 03, 2025 17:00

முதல் டெஸ்ட் போலவே ஆட்டம் இருப்பதால் ஆஸ்திரேலிய டீமும் குறைந்த ஸ்கோரில் சுருள வாய்ப்புள்ளது.


M. PALANIAPPAN
ஜன 03, 2025 15:50

ரோஹித் சர்மா இல்லாத இந்த மேட்ச் வெற்றி பெறுவார்களா? முதல் டெஸ்ட் போல ரோஹித் இல்லை, பும்ரா கேப்டன்


Anandh pandarinathan
ஜன 03, 2025 14:16

இன்றைய ஆட்ட நேரம் முடிவில் ஜாஸ் ஸ்பிரிட் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து உள்ளார் அதை பதிவேற்றுங்கள் இந்தியா இவ்வளவுதான் அடித்தது என்பதை பதிவிட்டுள்ளீர்கள் அதேபோல் ஜாஸ் ஸ்பிரிட் பும்ரா இந்தியா கிரிக்கெட் டீம் சார் சாதனை சாதனை புரியும் நம்பிக்கை வையுங்கள் மக்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை