உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேஷியாவில் சுரங்க வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி

இந்தோனேஷியாவில் சுரங்க வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்தனர்; 20 பேர் மாயமாகியுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் போகோர் மாவட்டத்தில் சட்டவிரோத தங்க சுரங்கம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சிசெரே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 328 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் தண்ணீர் புகுந்தது. அந்த சமயம் சுரங்கத்தினுள், 37 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அதில் 11 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், 26 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். சட்டவிரோத சுரங்கம் என்பதால் வெள்ளம் புகுந்து, 16 மணி நேரம் கழித்தே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. போலீசார், ராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள், என, 325 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு, 6 உடல்களை மீட்டனர். எஞ்சிய, 20 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !