அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்தில் 6 பேர் பலி
-நமது நிருபர்-அமெரிக்காவின் மிசிசிபி கடற்கரைக்கு அப்பால் ஹார்ன் தீவுப் பகுதிக்கு அருகே சிறிய ரக விமான விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். 8,800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.சம்பவ இடத்தில் மீட்பு படையினர் விரைந்தனர். 4 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. ''ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்'' என அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.