உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துருக்கி, கிரீஸ், சிரியா நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளியான பகீர் வீடியோ

துருக்கி, கிரீஸ், சிரியா நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளியான பகீர் வீடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அங்காரா: துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரம் மர்மாரிஸ். இங்கு இன்று (ஜூன்3) 6.2 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oeog8wn4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிலநடுக்கம் மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்தது. கிரீசில் உள்ள தீவான ரோட்ஸ் உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து, வீடுகளில் இருந்து வெளியே ஓடினர்.நிலநடுக்கம் ஏற்பட்ட தருணத்தில் வீடுகள் குலுங்கியது, அறைகளின் உள்ளே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி உள்ளது.தூக்கத்தில் இருந்த பலர் பயத்தில் ஜன்னல்கள் வழியாகவும், பால்கனியில் இருந்தும் எட்டி குதித்தனர். இதில் 7 பேர் காயம் அடைந்தனர். வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய முதன்மை தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள், எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலும் எதிரொலித்தது. முன்னதாக 2023ம் ஆண்டு 7.8 என்ற ரிக்டர் அளவுகோலில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 53,000 பேர் பலியாகினர் என்பது மறக்க முடியாத ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ashok kumar R
ஜூன் 03, 2025 22:24

துருக்கி சர்வ நாசமாக போகும். பாக்கிஸ்தான் கூட்டாலி


Perumal Pillai
ஜூன் 03, 2025 11:44

Sad to know that Greece has been affected.


Palanisamy Sekar
ஜூன் 03, 2025 08:22

துருக்கி பாதிக்கப்பட்டிருக்கும் என்றால் இந்த முறை பாகிஸ்தான் ஒரு பில்லியன் டாலரை இனாமாக வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Priyan Vadanad
ஜூன் 03, 2025 08:06

பகீர்னு கீது.


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூன் 03, 2025 08:38

உன் டொப்பிள் கொடி நாடான துருக்கியில் பூகம்பம் என்றால் உனக்கு பகீர்னுதானே இருக்கும் வந்துட்டானுக காலங்காத்தால..


மீனவ நண்பன்
ஜூன் 03, 2025 08:52

தம்பி பைஜாமாவை ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை