உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் சோகம்: பஸ்சில் தீப்பற்றியதில் 71 பேர் உடல் கருகி பலி!

ஆப்கானிஸ்தானில் சோகம்: பஸ்சில் தீப்பற்றியதில் 71 பேர் உடல் கருகி பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஒரு பயணிகள் பஸ் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் ஒரு லாரி மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஈரான் அகதிகளை ஏற்றிக் கொண்டு காபூல் நகரை நோக்கி பஸ் சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் 71 பேர் உயிரிழந்தனர் என்பதை ஆப்கானிஸ்தான் மாகாண அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என மாகாண அரசாங்க செய்தி தொடர்பாளர் அஹ்மதுல்லா முத்தகி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.Uthirapathi
ஆக 20, 2025 14:47

விபத்தில், இத்தனை பேர் உயிரிழக்க வாய்ப்பில்லை. சதிவேலையாக இருக்க வாய்ப்புள்ளது.


ரங்ஸ்
ஆக 20, 2025 13:53

சதி வேலையா ?


சமீபத்திய செய்தி