உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது

8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன் : இந்தியாவால் தேடப்பட்டு வந்த முக்கிய காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட எட்டு பேரை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., கைது செய்துள்ளது.பி.கே.ஐ., எனப்படும் 'பாபர் கல்சா இன்டர்நேஷனல்' அமைப்பு பஞ்சாபை அடிப்படையாக வைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதை மத்திய அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் ஆள் கடத்தல் வழக்கு ஒன்றில் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்தவர்களை அந்நாட்டு போலீசார் பல்வேறு இடங்களில் கைது செய்தனர்.அவர்களின் இடங்களில் நடந்த சோதனையில் இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நுாற்றுக்கணக்கான தோட்டாக்கள், 12 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.கடத்தல் வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர்.இதில் படாலா என்பவர் நம் நாட்டின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 14, 2025 19:52

பயங்கரவாதிகள் என்று உறுதிசெய்தபிறகு கைது செய்வதெல்லாம் வேஸ்ட். ஓடவிட்டு சுட்டுத்தள்ளவேண்டும்.


புதிய வீடியோ