ஹெலிகாப்டர் விபத்து 8 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின், கலி மந்தான் மாகாணத்தில் உள்ள மெலாவி மாவட்டத்திலிருந்து, 'எச் 130' ரக ஹெலிகாப்டர் ஒன்று, குபு ராயா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் தொழி ற்சாலை நோக்கி சென்றது. அதில், விமானி உட்பட ஆறு பேர் பயணித்தனர். புறப்பட்ட ஐந்து நிமிடங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை ஹெலிகாப்டர் இழந்தது. மீட்புப் படையினர் தீவிரமாக தேடியதில், பல மணி நேரத்துக்கு பின், செகாடாவ் மாவட்டத்தின் அடர்த்தியான வனப்பகுதியில், மலைகளுக்கு இடையே ஹெலிகாப்டர் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர், மலேஷியாவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.